கோவை பேரூர் அருகே கோவில் பூட்டை உடைத்து திருட முயன்ற 2 சிறுவர்கள் கைது
கோவை பேரூர் அருகே கோவில் பூட்டை உடைத்து திருட முயன்ற 2 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.;
கோவை பேரூர் அருகே கோவிலில் பூட்டை உடைத்து திருட முயன்ற ௨ சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.
கோவை பேரூர் அருகே மாசாணியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பேரூர் பட்டீஸ்வரர் கோவிலின் இணை கோவிலாக உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவிலுக்கு தினந்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். இதனால் எப்போதும் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். கோவிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக கோவி லில் உண்டியலும் உள்ளது. நேற்று இரவு கோவிலை அர்ச்சகர்கள் அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றனர். இந்தநிலையில் இரவு 11.30 மணியளவில் கோவிலுக்குள் இருந்து சத்தம் வந்தது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் சத்தம் கேட்டு, கோவிலின் அருகே சென்ற போது, உள்ளே 2 பேர் உண்டியலை உடைத்து பணத்தை திருட முயற்சித்து கொண்டி ருந்தனர். இதையடுத்து திருடன். திருடன்.. திருடன்.. என சத்தம் போட்டனர்.
பொது மக்கள் வந்ததை அறிந்ததும், கோவிலுக்குள் நின்றிருந்த 2 பேரும் தப்பியோடினர். இதுகுறித்து மக்கள் பேரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கோவிலில் பார்வையிட்டனர். மேலும் அங்கிருந்த கண்காணிப்பு காமிராக்களையும் ஆய்வு செய்தனர். இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து பேரூர் கோவில் சூப்பிரண்டு அமுதா கொடுத்த புகாரின் பேரில் பேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளையடிக்க முயன்றது தொண்டா முத்தூர் வஞ்சிமா நகரில் வசித்து வரும் 15 வயது சிறுவன் மற்றும் அசாம் மாநிலத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.