ஒகேனக்கல் அருவியில் குளிக்க, படகு சவாரிக்கு அனுமதி: கலெக்டர் உத்தரவு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும் படகு சவாரி செய்யவும் அனுமதியளித்து மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி உத்தரவிட்டுள்ளார்.

Update: 2022-05-25 02:30 GMT

ஒகேனக்கல்.

காவிரி ஆற்றில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பு தமிழக எல்லையான பிலிகுண்டுலு வினாடிக்கு 500 கனஅடி நீர்வரத்து இருந்தது. இந்நிலையில் கோடை காலம் தொடங்கியவுடன், கோடை மழை அவ்வப்போது செய்து வந்தது. இதனால் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்தது.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக கோடை மழை பரவலாக பொழியத் தொடங்கியது. இதனால் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்ததால் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. இந்நிலையில் கடந்த 17ந்தேதி காலை நிலவரப்படி வினாடிக்கு 7,500 கனஅடியாக நீர்வரத்து இருந்தது.

தொடர்ந்து தமிழக, கர்நாடக மாநில காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. இந்நிலையில் 18ந்தேதி காலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

தொடர்ந்து நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து 30 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது.காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து, செந்நிறத்தில் தண்ணீர் ஒகேனக்கல் பிரதான அருவி, அருவிக்கு செல்லும் நடைபாதை உள்ளிட்ட பகுதிகளை மூழ்கடித்து, வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.இதனால் ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு சுற்றுலா பயணிகள் வரவும், அருவி, ஆற்றுப் பகுதிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் கடந்த 18 ந்தேதி முதல் மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்ஷினி தடை விதித்தார்.

தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் தடை உத்தரவை அடுத்து ஒகேனக்கல் பிரதான அருவிக்கு செல்லும் நுழைவாயிலை பூட்டி, காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல், ஆலம்பாடி உள்ளிட்ட காவிரி ஆற்றுப் பகுதிகளில் வருவாய், தீயணைப்பு துறை, ஊரக வளர்ச்சி, காவல் துறையினர் உள்ளிட்டோர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர் கோடை காலம் தொடங்கியதிலிருந்து ஒகேனக்கல்லுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதித்ததால் சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். .

தற்போது ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று (25.05.2022) காலை 6.00 மணி நிலவரப்படி சுமார் 8000 கன அடி தண்ணீர் வரத்து வந்து கொண்டிருப்பதாலும், நீர் வரத்து குறைந்துள்ளதாலும் சுற்றுலா பயணிகள், பொதுமக்களுக்கு ஆற்றின் அருவியில் குளிக்கவும், படகுகளை இயக்கவும் விதிக்கப்பட்டிருந்த தடை இன்று 25.05.2022 புதன்கிழமை காலை 9.00 மணி முதல் விலக்கப்படுகிறது என தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் ச. திவ்யதர்சினி தெரிவித்துள்ளார்.

இதனால் சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். கடந்த 18ஆம் தேதி விதிக்கப்பட்ட தடைக்கு பிறகு ஒகேனக்கல்லில் குளிக்க பரிசல் இயக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது தாகும்.

Tags:    

Similar News