ஒகேனக்கல்: நாளை முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
சுற்றுலாதலத்திற்கு வருபவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்;
ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு நாளை முதல் அனுமதி அளிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த மார்ச் முதல் ஒகேனக்கல் சுற்றுலா தளம் மூடப்பட்டது. 6 மாதங்களுக்கு பிறகு தற்போது நாளை முதல் சுற்றுலா பயணிகள் செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், சுற்றுலா தலத்திற்கு வருபவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். பென்னாகரம் சோதனை சாவடியில் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றுகள் காண்பிப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி தகவல் தெரிவித்துள்ளார்.