இந்தியர்களின் வீடுகளில் உலா வரப்போகும் எந்திரன்..!

இந்தியர்களின் வீடுகளில் உலா வரப்போகும் எந்திரன்..!

எல்ஜி நிறுவனத்தின் வீட்டு ரோபோ விரைவில் வெளிவரப்பபோவதாக நிறுவனம் அறிவித்துள்ளது (கோப்பு படம்) 

எல்ஜி-யின் புதிய இரண்டு சக்கர வீட்டு ரோபோட் (எந்திரன்) இந்தியர்களின் வீடுகளில் உலா வரப்போகிறான்.

தென்கொரியாவை தலைமையகமாகக் கொண்ட நிறுவனமான எல்ஜி, வரும் சிஇஎஸ் 2024 தொழில்நுட்ப மாநாட்டில் தனது புதிய செய்யறிவு ரோபோவை அறிமுகப்படுத்தவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இந்த புதிய ரோபோட் பார்ப்பதற்கு அழகாக இருப்பதோடு, வீட்டில் உள்ள சின்னச் சின்ன வேலைகளை செய்யும் திறன் கொண்டுள்ளது. வீட்டில் யாரும் இல்லாதபோது வீட்டிற்குள் உலாவி விளக்குகளை, மின் விசிறிகளை அணைத்தல், செல்லப் பிராணிகளைப் பார்த்துக்கொள்ளுதல் போன்றவற்றை செய்யும் திறன் கொண்டது.

மேலும், வீட்டின் நேரடி காணொலிகளை பார்க்க உதவுதல், வீட்டில் ஏதேனும் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டால் உரிமையாளர்களைத் தொடர்பு கொள்ளுதல் போன்றவற்றை சிறப்பாகச் செய்யும் என எல்ஜி தெரிவித்துள்ளது.


அடுத்த வாரம் அறிமுகமாகவுள்ள இந்த ரோபோ, மனிதர்களின் மனநிலையை அவர்களின் நடவடிக்கைகள் மூலம் புரிந்து நடக்கக்கூடியது. மேலும், இதற்கு புதிய விஷயங்களையும் கற்றுக்கொடுக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

மனிதர்களைப் போலவே உரையாடும் திறன் கொண்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோவின் விலை பற்றி எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இந்த ரோபோ என்ற எந்திரன் இன்னும் சில மாதங்களில் இந்தியாவில் பல வீடுகளில் உலாவுவான் என தொழில்நுட்ப நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

முதல் ரோபோ

1926,ல் வெஸ்டிங்ஹவுஸ் எலக்ட்ரிக் கார்பரேஷேன் டெலிவாக்ஸ் என்னும், முதல்தானியங்கி உருவாக்கி ஒரு பயனுள்ள வேலையை செய்ய வைத்தது. பிற எண்ணிக்கையில் ஏராளமாக உள்ள எளிய தானியங்கிகளை அவர்கள் டெலி வோக்ஸ்ல் பின்பற்றினார்கள், அதில் ஒன்று ராஸ்துஸ் ஆகும், அது ஒரு கருப்பு மனிதனின் செப்பனிடாத பிம்பம் கொண்டிருந்தது. 1930களில், அவர்கள் மனித உருக்கொண்ட தானியங்கிவை எலெக்ட்ரோ என்ற பெயரில் பொருட்காட்சி நோக்கங்களுக்காக உருவாகினார்கள், அந்த நோக்கங்களுள் உலகச் சந்தைகள் 1939 மற்றும்1940 அடங்கும்.

1928ல், ஜப்பானின் முதல் தானியங்கி ககுடென்சொக்கு,உயிரியலார் மகொடோ நிஷிமுரா என்பவரால், வரையப்பட்டு வடிவமைக்கப்பட்டது.

முதல் மின்ம சுயமாக இயங்கும் தானியங்கிகள் பர்டன் நரம்பியல் நிறுவனம், பிரிஸ்டல், இங்கிலாந்து சார்ந்த வில்லியம் கிரே வால்ட்டர் என்பவரால் உருவாக்கப்பட்டன. அவைகளுக்கு பெயர்கள் எல்மர் மற்றும் எல்சி என்று இடப்பட்டன. இந்த தானியங்கிக்கள் ஒளியை உணர்ந்து வெளிப்புற பொருள்களோடு, தொடர்பு கொண்டிருக்கும்; மேலும் இவைகளை தூண்டுதலாகக் கொண்டு பயணிக்கும்.

முதல் உண்மையான நவீன தானியங்கி, மின்ம ரீதியில் திட்டமிட்டு இயங்க வடிவமைத்துக் கண்டு பிடித்தவர் ஜார்ஜ் தேவோல் ஆவார், அவர் அதை 1954 ஆண்டு கண்டு பிடித்தார், இறுதியில் அதனை யுனிமேட் என்றே அழைத்தார்.

Tags

Next Story