இருக்கன்குடி மாரியம்மன் கோயில் திருவிழா: திரளான பக்தர்கள் வழிபாடு

இருக்கன்குடி மாரியம்மன் கோயில் திருவிழா: திரளான  பக்தர்கள் வழிபாடு
X

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கும் இருக்கன்குடி மாரியம்மன் 

ஏராளமான பக்தர்கள் அக்கினிசட்டி எடுத்து, மாவிளக்கு வைத்து, முளைப் பாரி சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்

விருதுநகர் மாவட்டம் ,சாத்தூர் அருகேயுள்ள, பிரசித்தி பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடி மாதாந்திர வெள்ளி மற்றும் ஆடி பெருந்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இருக்கன்குடி ஆடி பெருந்திருவிழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தினமும் இருக்கன்குடி மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனைகள் நடைபெற்று வந்தன. ஆடி மாதாந்திர வெள்ளி மற்றும் ஆடி பெருந்திருவிழாவை முன்னிட்டு, இருக்கன்குடி மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் 'ரிஷப' வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.

மாரியம்மன் வீதி உலா நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் அக்கினிசட்டி எடுத்து வந்தும், மாவிளக்கு எடுத்தும், முளைப்பாரி எடுத்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

ஆடி மாதாந்திர வெள்ளியை முன்னிட்டு பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் வளர்மதி, பரம்பரை அறங்காவலர்கள் குழுத் தலைவர் ராமமூர்த்தி பூசாரி மற்றும் கோவில் அதிகாரிகள், அறங்காவலர் குழு நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags

Next Story
why is ai important to the future