காரியாபட்டியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம்...!

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தினத்தில் மரக்கன்றுகள் நட்ட மாணவர்கள்.
திருச்சுழி வைத்தியலிங்கநாடார் மேல்நிலைப் பள்ளியில், சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்:
காரியாபட்டி:
திருச்சுழியில் சுற்றுப்புறச் சூழல்,பாதுகாப்பு முகாம் நடை பெற்றது. விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வைத்திலிங்க நாடார் மேல்நிலைப் பள்ளி நாட்டுநல பணி திட்டம், மற்றும் காரியாபட்டி கிரீன் பவுண்டேஷன் சார்பாக, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளி த் தலைமை ஆசிரியர் செல்வராஜ் தலைமை வகித்தார்.கிரீன் பவுண்டேஷன் நிர்வாகி பொன்ராம் முன்னிலை வகித்தார்.
முகாமில், சுற்றுச்சூழல பாதுகாப்பின் அவசியம் பற்றியும். காலைநிலை மாற்றத்தால், ஏற்படும் பாதிப்புக்கள் பற்றியும், , சுற்றுச் சூழல் பாதுகாப்புக்காக வளர்ப்பதன் அவசியம் பற்றியும் பிளாஸ்டிக் ஒழிப்பு ஆகியவை குறித்து, மாணவர்களுக்கு கருத்துரை வழங்கப்பட்டது நிகழ்ச்சியில், மாணவர்கள், ஆசிரியர்கள் , சமூக ஆர்வலர்கள் அனை வரும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
முகாமில்,பள்ளி வளாகத்தில் மருதம், மகிழம், அரசமரம் மற்றும் பல்வேறு நிழல் தரும் மரக்கன்றுகள் நட்டு வைக்கப் பட்டது. நிகழ்ச்சியில், பள்ளிநாட்டுநலத்திட்டதிட்ட அலுவலர செல்வராஜ், பசுமை படை ஆசிரியர்முத்துக் கருப்பன் , பள்ளிக்குழு உறுப்பினர்கள். விஜயராஜன் நடராஜன்,சேகர், உடற்கல்வி ஆசிரியர்கள், பூமிநாதன் ,நாகராஜ், ஆறுமுகம் பள்ளி உதவியாளர் ராஜமாணிக்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu