சாலை விபத்து மூன்று பக்தர்கள் உயிரிழப்பு

சாலை விபத்து மூன்று பக்தர்கள் உயிரிழப்பு
X

பைல் படம் 

தென்காசி மாவட்டத்தில் இருந்து இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மூன்று பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது லாரி மோதி 3 பேர் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீத நல்லூர் பகுதியைச் கிராமத்தை முருகன்(45), மகேஷ்(35), பவுன்ராஜ்(45) ஆகியோர் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என 50பேர் கொண்ட குழுவாக சங்கரன்கோவிலில் இருந்து பாதையாத்திரையாக இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு சென்றனர். சாத்தூர்-கோவில்பட்டி நான்கு வழிச்சாலையில் பாதயாத்திரையாக இன்று அதிகாலை சென்று கொண்டிருந்த போது என்.வெங்கடேஸ்வரபுரம் விலக்கு அருகே திருநெல்வேலியில் இருந்து மதுரை நோக்கி சென்ற லாரி பாதயாத்திரை சென்ற குழுவினர் மீது மோதியது.

இதில் முருகன்,மகேஷ்,பவுன்ராஜ் ஆகிய 3 பேரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்த சாத்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநரான திருநெல்வேலி தாழையூத்து பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் 29 என்பவரை தாலுகா போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்