சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் போக்சோவில் கைது
சிவகாசி அருகே, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீஸார் போக்சோவில் கைது செய்து சிறையிடைத்தனர்
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள விஸ்வநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (25). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறினார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் சாந்தி தலைமையில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதிகாரிகள் விசாரணையில் சிறுமி பாதிக்கப்பட்டது தெரிய வந்ததால், அலுவலர் சாந்தி இது குறித்து சிவகாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் மாரிமுத்துவை, போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் போக்சோ: அதாவது The Protection of Children from Sexual Offenses என்பது சுருக்கமாக POCSO) Act என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட சட்டமாகும். இதைத்தான் சுருக்கமாக போக்சோ சட்டம் என அழைக்கப்படுகிறது. இச்சட்டம் , மாநிலங்களவையில் 2012ம் ஆண்டு மே மாதம் 10ம் தேதியும், மக்களவையில் மே மாதம் 22ம் தேதியும் நிறைவேற்றப்பட்டது. இதற்கான விதிமுறைகளும் உருவாக்கப்பட்டு, நவம்பர் 14ம் தேதி அரசிதழில் அறிக்கை வெளியிடப்பட்டது.
இச்சட்டம் வருவதற்கு முன்னர் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை, பொதுவான இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டது. இப்பிரிவுகள், குழந்தைகள் வயது வந்தவர்கள் என்ற வித்தியாசமின்றி வழக்குகளைக் கையாண்டன. 18 வயதுக்குக் குறைவான அனைத்துக் குழந்தைகளும் பாலின வித்தியாசமின்றி, இச் சட்டத்தின் வரையறைக்குள் வருவர். அதாவது ஆண் குழந்தைகளில் சிறுவர்கள் பாதிக்கப்பட்டாலும், இச்சட்டம் தண்டனை வழங்கும்.
பாலியல் தாக்குதல்/வன்முறை, பாலியல் துன் புறுத்தல்/சீண்டல், ஆபாசப் படமெடுக்கக் குழந்தைகளைப் பயன்படுத்துதல் போன்றவற்றைக் குற்றங்களாக இச்சட்டம் முன்வைக்கிறது. குழந்தைகள் பாதிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் அவர்களின் சாட்சியம் பதிவு செய்யப்பட வேண்டும். ஒரு வருடத்துக்குள் வழக்கு முடிக்கப்பட வேண்டும். இது கண்டிப்பாக பின்பற்றப் படவேண்டும். சாதாரண சிறைத் தண்டனையிலிருந்து, கடுங்காவல், ஆயுள் தண்டனை வரை கொடுக்கலாம் என இந்த சட்டம் குறிப்பிடுகிறது. சில வகை பாலியல் வன்முறைக்குக் கூடுதல் தண்டனை உண்டு.
உதாரணமாக, காவல் துறையினர், பாதுகாப்புப் படையினர், ராணுவம், அரசு அதிகாரிகள் போன்றவர்கள் பாதுகாவலர்கள் அல்லது நம்பிக்கைக் குரியவர்கள். அவர்களே குற்றம் இழைக்கும் போது, அதிக தண்டனை உண்டு என இச்சட்டம் தெளிவுபடுத்துகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu