பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த ஓய்வு பெற்ற காவல் துறையினர் கூட்டத்தில் தீர்மானம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த ஓய்வு பெற்ற காவல் துறையினர் கூட்டத்தில் தீர்மானம்

ஓய்வு பெற்ற காவல் துறையினருக்கான சிறப்பு மருத்துவ முகாம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திட வேண்டும், ஓய்வு பெற்ற காவல் துறையினர் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்திட வேண்டும் என்று ஓய்வு பெற்ற காவல் துறையினர் நலச்சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருவண்ணாமலையில் மாவட்ட ஓய்வு பெற்ற காவல் துறையினர் நலச்சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவரும் ஓய்வு பெற்ற டிஎஸ்பி சிவலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் ஆறுமுகம், மாவட்ட துணை தலைவர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பலராமன் வரவேற்றார்.

இக்கூட்டத்தில் 80 வயது பூர்த்தியான காவல் துறையினர் கௌரவிக்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்ட இடம் தேர்வு குறித்தும், புதிய உறுப்பினர்களின் பென்ஷன் நிலுவைத் தொகை பெறுவது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.

கூட்டத்தில் ஓய்வு பெற்ற காவல் துறையினருக்கு மருத்துவ காப்பீட்டு கழகம் மருத்துவ செலவு நிராகரிப்பதால் வேறு காப்பீட்டுக் கழகம் அரசு தலையிட்டு மாற்றி தர வேண்டும் ,நிலுவைத் தொகை மற்றும் அகவிலைப்படி வழங்கிட வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த பொதுக்குழு கூட்டத்தில் ஓய்வு பெற்ற காவல் துறையினருக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. கூட்டத்தில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் ஓய்வு பெற்ற காவல் துறையினர் 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

சத்துணவு ஊழியா்கள் சங்க மாவட்ட செயற்குழுக் கூட்டம்

போளூரில் சத்துணவு ஊழியா்கள் சங்க மாவட்ட செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் சம்பத் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் விஜயா முன்னிலை வகித்தாா். ஒன்றியத் தலைவா் மணிகண்டன் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத் தலைவா் அண்ணாதுரை கலந்து கொண்டு பேசும்போது,

தமிழக முதல்வா் தோ்தல்நேர வாக்குறுதியை நிறைவேற்றித் தர மாநிலம் தழுவிய மாவட்ட தலைநகரில் ஜூன் 21-ஆம் தேதி தா்னா நடத்துவது எனவும் , இதில் சத்துணவு ஊழியா்கள் சங்க நிா்வாகிகள் 1500 போ் பங்கேற்க வேண்டும் என பல்வேறு தீா்மானங்கள் குறித்துப் பேசினாா். கூட்டத்தில் சத்துணவு ஊழியா்கள் சங்க நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

Tags

Read MoreRead Less
Next Story