கலைஞர் நூற்றாண்டு விழா: ஏழை எளிய மக்களுக்கு இலவச குக்கர்

பயனாளிகளுக்கு இலவச குக்கர்களை வழங்கிய எ.வ.வே. கம்பன்
திருவண்ணாமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆடையூர் தேவானந்தல் அடி அண்ணாமலை அய்யம்பாளையம் பண்டிதப்பட்டு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு இலவச குக்கர் வழங்கும் நிகழ்ச்சியில் மாநில மருத்துவர் அணி துணை தலைவர் எ.வ.வே. கம்பன் கலந்து கொண்டு வழங்கினார்கள்.
கலைஞர் நூற்றாண்டு பிறந்த நாளை ஒட்டி திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களை சேர்ந்த ஏழை எளிய மக்களுக்கு இலவச குக்கர் வழங்கும் விழா மத்திய ஒன்றிய செயலாளர் மெய்யூர் சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் எ.வ.வே. கம்பன், கலந்துகொண்டு பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு இலவச குக்கர்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.
குறிப்பாக இலவச மின்சாரம் வழங்கியவர் டாக்டர் கலைஞர். பெண்களுக்கு சொத்தில் சம உரிமை என சட்டம் கொண்டு வந்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆவார்.
அவரது வழியில் திமுக தலைவர், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், பெண்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். குறிப்பாக அரசு பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம், கலைஞர் மகளிர் உரிமை திட்டம் என்ற ஒரு திட்டத்தை கொண்டு வந்து குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூபாய் ஆயிரம் மகளிர் உரிமைத் தொகை வழங்கியவர் தான் நமது முதல்வர் ஸ்டாலின்.
அதேபோல் படித்த பெண்களுக்கு கல்லூரியில் படிக்க மாதம்தோறும் ரூபாய் ஆயிரம் உதவித்தொகை என பெண்களுக்கான பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி பெண்களுக்கான ஆட்சியை தமிழக முதல்வர் தற்போது சிறப்பாக செய்து வருகிறார்.
நமது திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், தமிழக அமைச்சருமான எ.வ.வேலு, கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என உத்தரவிட்டார் . அவரின் உத்தரவுக்கிணங்க கடந்த இரண்டு வாரங்களாக திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் இலவச குக்கர்களை வழங்கி வருகிறோம் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் முத்து, மாவட்ட துணை செயலாளர் பிரியா விஜய ரங்கன் ,மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், திருவண்ணாமலை ஒன்றிய குழு தலைவர் கலைவாணி, அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட அமைப்பாளர் ஆறுமுகம், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் மெய்கண்டன், அடி அண்ணாமலை பாபு, பாலச்சந்தர், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஒன்றிய செயலாளர்கள், ஒன்றிய கழக நிர்வாகிகள் , பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu