திருவண்ணாமலை மாவட்டத்தில் கல்லறைத் திருநாள்
கல்லறை தோட்டங்களில் சிறப்பு பிராத்தனை செய்து வழிபட்ட கிறிஸ்தவர்கள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் கல்லறைத்திருநாளை முன்னிட்டு, ஏராளமான கிறிஸ்தவர்கள், இறந்துபோன தங்களது உறவினர்கள் மோட்சம் அடைய வேண்டும் என்பதற்காக, சிறப்பு பிராத்தனை செய்து வழிபட்டனர்.
இறந்த முன்னோர்களின் ஆன்மாவிற்கு மரியாதை செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 2- ம் தேதி உலகம் முழுவது உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களால் கல்லறைத்திருநாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று தென்னிந்தியாவில் கிறிஸ்தவர்களால் கல்லறைத் திருநாள் நிகழ்ச்சிகள் அனுசரிக்கப்பட்டது வருகிறது.
அன்று தங்கள் குடும்பத்தினருடன் தேவாலயங்களுக்குச் சென்று திருப்பலி, சிறப்பு வழிபாடு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வர். பின்னர் அவரவர் முன்னோர்களின் குடும்ப கல்லறைகளுக்குச் சென்று அங்கு மலர்களால் அலங்கரிப்பர். பின்னர் மெழுவர்த்தி ஏற்றி முன்னோர்களையும், குடும்பத்தில் இறந்தவர்களையும் நினைத்து வழிபடுவது வழக்கம்.
அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் கல்லறைத்திருநாளை முன்னிட்டு, ஏராளமான கிறிஸ்தவர்கள், இறந்துபோன தங்களது உறவினர்கள் மோட்சம் அடைய வேண்டும் என்பதற்காக, சிறப்பு பிராத்தனை செய்து வழிபட்டனர்.
போளூர்
போளூர்-சென்னை சாலையில் உள்ள கல்லறை தோட்டத்துக்கு கிறிஸ்தவர்கள் சென்று தங்களது முன்னோர்களின் கல்லறைகளை சுத்தம் செய்து மலர் மாலை அணிவித்து, மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தனர். அதைத் தொடர்ந்து பாதிரியார் செபாஸ்டீன் பிரான்சிஸ் திருப்பலி நடத்தினார். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
கீழ்பெண்ணாத்தூர்
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் தொகுதி வேட்டவளத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கல்லறை திருநாளையொட்டி திருக்கோவிலூர் சாலையில் அமைந்துள்ள கல்லறை தோட்டத்திற்கு சென்று இறந்த தங்கள் உறவினர்களின் கல்லறைகளை தூய்மைப்படுத்தி மாலை அணிவித்து மலர் தூவி மெழுகுவர்த்தி ஏற்றி மலர் வளையும் வைத்து அவர்களுக்கு பிடித்த உடைகள் உணவுகளை படைத்தும் உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து கல்லறை தோட்டத்தில் வேட்டவலம் புனித தூய நெஞ்ச ஆலய பங்குத்தந்தை ஆரோக்கியசாமி , மறைந்த ஆத்மாக்கள் இளைப்பாற சிறப்பு கூட்டு திருப்பலி நடத்தி கல்லறைகளை புனிதப்படுத்தினார் . இதேபோல வேட்டவலம் மறை வட்டத்திற்குட்பட்ட ஆவூர் , ஜமீன் கூடலூர், சாணி பூண்டி ஆகிய பகுதிகளில் உள்ள கல்லறை தோட்டங்களில் ஏராளமான கிறிஸ்தவர்கள் தங்கள் முன்னோர்களின் கல்லறைகளுக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மெழுகுவர்த்தி ஏற்றி சிறப்பு பிரார்த்தனை செய்து கல்லறை திருநாளை அனுசரித்தினர்.
செங்கம்
திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம், அள்ளிக்கொண்டப்பட்டு, தென்கரும்பலூர், அந்தோணியார்புரம், பெருந்துறைப்பட்டு, விருது விளங்கினான் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கல்லறை தோட்டத்துக்கு கிறிஸ்தவர்கள் சென்று தங்களது முன்னோர்களின் கல்லறைகளை சுத்தம் செய்து வண்ண மலர்கள் மற்றும் மாலைகளால் அலங்கரித்தனர்.
பின்னர் சிறப்பு பிரார்த்தனை மற்றும் கூட்டு திருப்பலி நடைபெற்றது. இதனையடுத்து கிறிஸ்தவர்கள் தங்களது முன்னோர்களின் கல்லறைகளில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்தினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu