போக்குவரத்து காவல்துறை சார்பில் தலைக்கவசம்!

போக்குவரத்து காவல்துறை சார்பில் தலைக்கவசம்!
X
செங்குன்றத்தில் போக்குவரத்து காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 1000 பேருக்கு தலைக்காவசத்தை ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர் வழங்கினார்.

செங்குன்றத்தில் போக்குவரத்து காவல்துறையின் சார்பில் இருசக்கர வாகன ஓட்டிகள் 1000 பேருக்கு ஆவடி காவல் ஆணையர் தலைக்கவசம் வழங்கினார். சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஹெல்மெட் வழங்கி "தலைக்கவசம் உயிர் கவசம்" என வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை. குற்ற செயல்களில் உயிரிழப்பவர்களை விட சாலை விபத்துக்களில் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும் பேசினார்.

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் - வடகரை சாலை சந்திப்பில் சாலை பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் செங்குன்றம் போக்குவரத்து காவல் துறையின் சார்பில் ‌இருசக்கர வாகன ஓட்டிகள் 1000 பேருக்கு தலைக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர் கலந்து கொண்டு வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் வழங்கினார்.

வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசத்தை அணிவித்த காவல் ஆணையர் சங்கர் சாலை பாதுகாப்பு குறித்து எடுத்துரைக்கும் துண்டு பிரசுரங்களையும் அவர்களிடம் வழங்கினார்.

முன்னதாக தலைக்கவசம் அணிவதன் அவசியம் பற்றி எடுத்துரைத்தும் போக்குவரத்து விதிகளை மதித்து வாகனங்களை இயக்கவும் விபத்திலா பயணம் மேற்கொள்ள வேண்டும் எனவும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஆவடி மாநகர காவல் எல்லையில் ஆண்டுக்கு 50 பேர் கொலை போன்ற குற்ற செயல்களில் உயிரிழக்கும் நிலையில் சாலை விபத்துக்களில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதாக தெரிவித்தார்.

ஆண்டொன்றிற்கு 1000 க்கும் மேற்பட்ட சாலை விபத்துக்களில் 1500 க்கும் மேற்பட்டோர் காயமடைவதாகவும் ஆணையர் தெரிவித்தார். இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும், குடிபோதையில் வாகனத்தை இயக்க கூடாது, அதி வேகத்தில் வாகனங்களை இயக்க கூடாது, உள்ளிட்ட சாலை விதிகளை முறையாக பின்பற்றிட வேண்டும் என அறிவுறுத்தினார்.

வாகன ஓட்டிகளுக்கு வழங்குவதற்காக 1000 ஹெல்மெட்டுகளை வழங்கிய கொடையாளர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் ஆணையர் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய காவல் ஆணையர் சங்கர் சாலையில் பயணிக்கும் போது கட்டாயம் ஹெல்மெட் அணிந்து பாதுகாப்பான சாலை பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என கேட்டு கொண்டார். முன்னதாக தலைக்கவசம் உயிர்கவசம் என்பதை உணர்த்தும் வகையில் ஹெல்மெட்டுகள் அனைத்தையும் தமிழ் எழுந்து வடிவில் போக்குவரத்து காவல்துறையினர் ஏற்படுத்தி வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!