தூய்மை பணியாளர்களுக்கு சாய் தர்ஷன் அறக்கட்டளையின் சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு
ஸ்ரீ சாய் தர்ஷன் அறக்கட்டளை சார்பில் பாகல்மேடு கிராமத்தில்53 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.
ஸ்ரீ சாய் தர்ஷன் அறக்கட்டளை சார்பில் பாகல்மேடு கிராமத்தில்53 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், கன்னிகாபுரம் ஊராட்சியில் ஸ்ரீ சாய்தர்ஷன் அறக்கட்டளை இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் தலைவர் குருமாயி சாந்தம்மாள் ஏற்பாட்டில் தூய்மைப் பணியாளர்கள்,தூய்மை காவலர்களுக்கு பொங்கலுக்கு தேவையான 11 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.
எல்லாபுரம் ஒன்றியத்தைச் சேர்ந்த பாலவாக்கம், பூரிவாக்கம்,திருநிலை,அத்திவாக்கம்,ஆமிதாநெல்லூர், மஞ்சங்காரணை, இலட்சுவாக்கம், சென்னங்காரணி,பேரண்டூர், செஞ்சிஅகரம்,தாராட்சி, தண்டலம்,காக்கவாக்கம், தொளவேடு உள்ளிட்ட 20 ஊராட்சிகளில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்கள்,தூய்மை காவலர்கள் என 53 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவி பொருட்கள் வழங்கும் இந்நிகழ்ச்சி பாகல்மேடு கிராமத்தில் நடைபெற்றது.
இதில்,பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக மஞ்சள்தூள்,அரிசி, வெல்லம்,நெய்,எண்ணெய், சிறுபருப்பு,முந்திரி,திராட்சை,ஏலக்காய்,குளியல் சோப்பு,துணி சோப்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில்,ஸ்ரீ சாய்தர்ஷன் அறக்கட்டளையின் சார்பாக சுவாமி ஸ்ரீ பாதா, சுவாமிநாதன்,ரவிகாவ் ஆகியோர் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு 11 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினர்.
பின்னர்,அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்தனர்.முன்னதாக அனைவரையும் சமூக சேவகர் டி.கண்ணன் வரவேற்றார். முடிவில்,கே.திவ்யா நன்றி கூறினார். இந்த அறக்கட்டளை சார்பில் கடந்த கொரோனா காலகட்டத்தில் பல்வேறு கிராமங்களுக்கு சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் நிவாரண பொருட்கள் தொடர்ந்து வழங்கி வந்தனர். இது மட்டுமல்லாமல் தீபாவளி, பொங்கல் பண்டிகை நாட்களிலும் ஏழை எளிய மக்கள் கொண்டாட வேண்டும் என ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழா நாட்களில் இதுபோன்று நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.
சமீபத்தில் புயல் காரணத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இந்த அறக்கட்டையில் சார்பில் பல்வேறு உதவிகள் செய்ததும் குறிப்பிடத்தக்கது. பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக்கொண்ட தூய்மைப் பணியாளர்கள் தங்களின் நெஞ்சார்ந்த நன்றியை அறக்கட்டளைக்குத் தெரிவித்துக் கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu