அரசு மதுபான கடையை அகற்ற பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டம்!

அரசு மதுபான கடையை அகற்ற பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டம்!
X
பெரியபாளையம் அருகே ஆரணியில் அரசு மதுபான கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

பெரியபாளையம் அருகே குடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கைது.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த ஆரணியில் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். குடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரி 50க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் டாஸ்மாக் கடையின் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். குடியிருப்பு பகுதியில் உள்ள இந்த டாஸ்மாக் கடையினால் பெண்கள் சிரமத்தை சந்தித்து வருவதாக புகார் தெரிவித்தனர்.

பள்ளி, கல்லூரி செல்லும் மாணவிகள், அலுவலகம் செல்லும் பெண்கள் என மாலை நேரங்களில் வீடு திரும்பும் போது குடிமகன்களால் தொந்தரவுக்கு உள்ளாவதாக குற்றம் சாட்டினர். மேலும் காலை நேரங்களிலும் சட்ட விரோத மது விற்பனையால் குடிமகன்கள் குடி போதையில் தொடந்தரவு செய்வதாகவும், பெண்கள் அச்சமின்றி செல்ல முடியாத நிலை உள்ளதாக தெரிவித்தனர். ஒரு சில நேரங்களில் போதை தலைக்கேறிய குடிமகன்கள் சாலையில் செல்வோரிடம் ரகளையில் ஈடுபட்டு அச்சுறுத்துவதாகவும் குற்றம் சாட்டினர்.

தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கலைந்து செல்ல மறுப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர்.

இதையடுத்து பெண்கள் உட்பட போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை கைது செய்ய முற்பட்டனர். அப்போது பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பொதுமக்களை கைது செய்ய முயன்ற போது இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோரை கைது செய்த காவல்துறையினர் அவர்களை தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதனையடுத்து டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்றது.

டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்