நிலத்தை மீட்டு தர கோரி கோட்டாட்சியரிடம் மனு அளித்த நரிக்குறவர் இனத்தவர்.!

நிலத்தை மீட்டு தர கோரி கோட்டாட்சியரிடம் மனு அளித்த நரிக்குறவர் இனத்தவர்.!
X
சோழவரம் அருகே ஒர்க் காடு கிராமத்தில் நரிக்குறவர் மக்களுக்கு வழங்கிய 45 ஏக்கர் நிலத்தை தனி நபர் ஆக்கிரமித்த நிலத்தை மீட்டு தர கோரி கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.

சோழவரம் அருகே தமிழக அரசால் தங்களுக்கு பூமிதானமாக வழங்கப்பட்ட 45 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு. அதனை மீட்டுத்தரக்கோரி நரிக்குறவர்கள் பொன்னேரி சார் ஆட்சியரிடம் மனு அளித்ததால் பரபரப்பு!

திருவள்ளூர் மாவட்டம், ஒன்றியம்,ஒரக்காடு ஊராட்சியில் சுமார் 4000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.இந்த ஊராட்சியை சேர்ந்த நரிக்குறவர்கள் இன மக்கள் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள தங்களுக்கு சொந்தமான 45 ஏக்கர் நிலத்தை மீட்டு தரக்கோரி பொன்னேரி சார் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட நரிக்குறவர் மக்கள் தெரிவிக்கையில சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு இங்கு வசித்து வந்த எங்கள் முன்னோருக்கு ஒரு குடும்பத்திற்கு ஒரு ஏக்கர் வீதம் 45 குடும்பத்திற்கு 45 ஏக்கர் நிலத்தை பூமிதானமாக அளித்ததாகவும் எங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் பிழைப்புக்காக வெளியூர்களுக்கு சென்ற சூழ்நிலையில் சிலர் போலியான ஆவணங்கள் தயார் செய்து 45 ஏக்கர் நிலத்தை அபகரித்து விட்டதாகவும்,இதற்கு அரசு அதிகாரிகள் சிலர் உடந்தையாக இருந்ததாகவும் தெரிவித்த நரிக்குறவர்கள் நாடோடியாக இருக்கும் தங்களுக்கு தனியார் ஆக்கிரமிப்பில் இருக்கும் நிலத்தை மீட்டு தரவேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

Tags

Next Story