ஊத்துக்கோட்டையில் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி
ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை டி.ஜே.கோவிந்தராஜன் எம்.எல்.ஏ வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் மின்வாரிய அலுவலகம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில், பேரூராட்சிகள் துறை, வருவாய்த்துறை,இ-சேவை மையம்,வேலைவாய்ப்பு துறை, எரிசக்தி துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை, காவல்துறை,வீட்டுவசதி நகர்புற வளர்ச்சி துறை,நகர் ஊரமைப்பு துறை,சமூக நலத்துறை,தொழில் மையம் மற்றும் தாட்கோ,இந்தியன் வங்கி,தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை,வீட்டு வசதி வாரியம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட பதினைந்து துறை உள்ளிட்ட 15 துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து 350 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டனர். அப்போது எட்டிக்குளம் பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் தாங்கள் வசித்து வரும் பகுதிக்கு பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் 30 நாட்களுக்குள் பயனாளிகளுக்கு உரிய பதிலை வழங்குவர். நடைபெற்ற இந்நிகழ்ச்சிகளுக்கு, பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஜெயகுமார் தலைமை தாங்கினார்.ஊத்துக்கோட்டை தாசில்தார் வாசுதேவன், செயல் அலுவலர் சதீஷ்,திருவள்ளூர் மாவட்ட திட்ட குழு உறுப்பினரும்,பேரூர் திமுக செயலாளருமான கே.அபிராமி,பேரூராட்சி மன்ற தலைவர் அப்துல்ரஷீத், துணைத் தலைவர் ஆர்.குமரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜே.கோவிந்தராஜன் கலந்து கொண்டு பொதுமக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பட்டா பெயர் மாற்றம்,மின் இணைப்பு,விவசாய மின் இணைப்பு பெயர் மாற்றங்கள், இல்லம் தேடி மருத்துவம், மருத்துவ பெட்டகம் உள்ளிட்டவைகளைபயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளாக வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்ச்சியில்,பேரூராட்சி மன்ற உறுப்பினர் கோல்டு மணி,மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம்,அயலக அணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் எம்.ஆர்.ஸ்ரீதர், விவசாய அணி சம்பத், ஆதிதிராவிடர் அணி ஏனம்பாக்கம் சம்பத்,தாராட்சி கார்த்திக் உள்ளிட்ட மாவட்ட,ஒன்றிய,பேரூர், கிளைக் கழக நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியின் முடிவில்,பேரூராட்சி மன்றதலைமை எழுத்தர் பங்கஜம் நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu