வழக்கறிஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு!

வழக்கறிஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு!
X
2024-ஆண்டிற்கான வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

திருவள்ளூர் அருகே ஊத்துக்கோட்டை வழக்கறிஞர் சங்க 2024-ஆம் ஆண்டிற்கான சங்க நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வழக்கறிஞர் சங்கத்திற்கான 2024-ஆம் ஆண்டிற்கான சங்க நிர்வாகிகள் தேர்வு செய்வதற்கான நேற்று தேர்தல் நடைபெற்றது. இதில் ஊத்துக்கோட்டை வழக்கறிஞர் சங்க காப்பாளராக மூத்த வழக்கறிஞர் பி.என்.தீனதயாளன், சங்க தலைவராக ஏ.வேல்முருகன், செயலாளராக கவிபாரதி, பொருளாளராக ஜி.என்.நரசிம்மன், துணைத் தலைவராக சாந்தகுமார், இணைச் செயலாளராக சிலம்பரசன் என்கின்ற சூர்யா ஆகியோர் புதிய பொறுப்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து வெற்றி பெற்ற பொறுப்பாளர்கள் ஊர்வலமாக சென்று ஊத்துக்கோட்டை பஜார் பகுதியில் உள்ள அண்ணா சிலை, பெரியார் சிலை, எம்ஜிஆர் சிலை மற்றும் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அவர்களுக்கு முன்னாள் ஊத்துக்கோட்டை வழக்கறிஞர் சங்க பொறுப்பாளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இதில் மூத்த செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.கமலாகரன், ஜே.வெஸ்லி, பி.எம்.சாமி, கே.முருகன், எம்.பார்த்திபன், ஆர்.ராஜசேகரன், ஆர்.வெற்றிதமிழன், டி.செஞ்சிநாதன், ஆர்.பாலசுப்பிரமணியகுமார், கே.சுரேஷ், ஏ,சீனிவாசன், ஜே.முனுசாமி, எம்.பொன்னுசாமி, எஸ்.இளங்கோவன், ஆர்.டி.மகேந்திரன், டி.கன்னியப்பன் மற்றும் இளம் செயற்குழு உறுப்பினர்கள் பிரகாஷ், சி.இளங்கோவன், எல்.பழனி, எம்.சுரேஷ், எம்.சுந்தர்ராஜ், கே.முனுசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai as the future