வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா!

வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா!
X
எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை புகையின்றி கொண்டாட வேண்டும். அனைத்து மதத்தினரும் கலந்து கொள்ளுமாறு சமத்துவத்துடன் சமத்துவ பொங்கல் கொண்டாட வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.மேலும், தமிழக மக்கள் பொங்கல் விழாவை கொண்டாட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரொக்க பணம் ரூ.1,000,அரிசி,சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கியது.

மேலும்,அரசு அலுவலகங்களான வட்டார வளர்ச்சி அலுவலகம். பேரூராட்சி மன்ற அலுவலக வளாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த பொங்கலை சமத்துவ பொங்கலாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில்,திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்தில் உள்ள எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

இதை முன்னிட்டு வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் பல வண்ணங்களில் கோலம் போட்டிருந்தனர்.மேலும், மாஇலை தோரணங்கள் அலுவலகம் முழுவதும் கட்டப்பட்டிருந்தது.இதன் பின்னர்,வட்டார வளர்ச்சி அலுவலக நுழைவாயிலில் முழு கரும்பை அலங்காரமாக கட்டி நிறுத்தி வைத்தனர்.


இதன் அருகே அலங்கரிக்கப்பட்ட பானையில் பொங்கல் வைத்தனர். பொங்கல் பொங்கியபோது அங்கிருந்த அனைவரும் பொங்கலோ! பொங்கல்!! என்று கோஷமிட்டனர். நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வட்டார ஊராட்சிகள் பொற்செல்வி,கிராம ஊராட்சிகள் சத்தியமூர்த்தி மற்றும் அலுவலகத்தில் பணியாற்றும் பணியாளர்கள்,ஊழியர்கள்,

53 ஊராட்சிகளில் பணியாற்றும் ஊராட்சி செயலர்கள் உமாநாத், பொன்னரசு, சரேஷ், ரமேஷ், சரவணன், ரமேஷ், குமரவேல்,உள்ளிட்டோர் பாரம்பரிய உடை அணிந்து இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.பின்னர், கூடியிருந்து அனைவரும் பொங்கல் சாப்பிட்டனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்