திருவள்ளூரில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 600 வழக்குகள் பதிவு

திருவள்ளூரில் ஊரடங்கை மீறியதாக  இதுவரை 600 வழக்குகள் பதிவு
X

வாகன சோதனை நடைபெறும் இடத்திற்கு திருவள்ளூர் மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் மீனாட்சி சென்று ஆய்வு மேற்கொண்டார்.

கொரோனா விதிறைகளை மீறியதாக திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 600க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்ட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

திருவள்ளுர் மாவட்டத்தில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தும் வகையில் மாவட்டம் முழுவதும் 40 இடங்களில் காவல் துறையினர் தடுப்புகள் அமைத்து, வாகன தணிக்கை செய்து வருகின்றனர். , திருவள்ளூர் மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் மீனாட்சி, வாகன தணிக்கை நடைபெறும் இடத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

வாகனங்களில் வருபவர்கள் முறையாக இ- பதிவு செய்து உள்ளார்களா அல்லது அவர்கள் உண்மையாக அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் வருகிறார்களா என்பதை சோதனை செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கூறிய அவர், திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து முக்கிய பகுதிகளிலும் தற்காலிக சோதனைச் சாவடி அமைத்து போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும், இதுவரை தேவையில்லாமல் வெளியில் சுற்றியவர்கள் 600க்கும் மேற்பட்டோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினர்.

இந்த ஆய்வின் போது திருவள்ளூர் உட்கோட்ட டிஎஸ்பி பொறுப்பு அசோகன், டவுன் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், எஸ். ஐ. சக்திவேல் உள்ளிட்ட காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது