திமுக அரசைக் கண்டித்து தாமரைப்பாக்கத்தில் அதிமுக ஆர்ப்பாட்டம்..

திமுக அரசைக் கண்டித்து தாமரைப்பாக்கத்தில் அதிமுக ஆர்ப்பாட்டம்..
X

திமுக அரசைக் கண்டித்து தாமரைப்பாக்கத்தில் அதிமுக ஆர்ப்பாட்டம்.

திமுக அரசைக் கண்டித்து, திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகேயுள்ள தாமரைப்பாக்கத்தில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் திமுக அரசின் மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு மற்றும் பால் விலை உயர்வு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து அதிமுக சார்பில் அனைத்து ஊராட்சி ஒன்றிய பகுதிகளிலும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் இன்று அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மத்திய மாவட்டம் எல்லாபுரம் தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் ஒன்றிய கழகச் செயலாளர் மகேந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் எல்லாபுரம் ஒன்றிய குழு பெருந்தலைவர் வடமதுரை ரமேஷ், துணைத் தலைவர் வழக்கறிஞர் சுரேஷ் ஆகியோர் முன்னில வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான பெஞ்சமின் மற்றும் தலைமை கழக பேச்சாளர் புதூர் மணி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் லிங்கன், கீதா துளசிராமன், பொன் பழனி, நரேஷ் பாபு, குருவாயல் தயாளன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், ராஜீவ் காந்தி, ராஜா, தமிழ் மன்னன், சரவணன், புஷ்பராஜ், ஜேம்ஸ் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்,

ஆர்ப்பாட்டத்தின்போது, மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு மற்றும் பால் விலை உயர்வு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்தும், திமுக அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Tags

Next Story
கீழ்பவானியில் நெல் அறுவடை கோலாகலம்..! இன்று முதல் கொள்முதல் நிலையங்கள் செயல்பாட்டுக்கு தயாராகின்றன..!