மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்
X
மழை,வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெரியபாளையம் பகுதி மக்களுக்கு தனியார் தொண்டு நிறுவனங்களின் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

பெரியபாளையத்தில் மிகஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

சமீபத்தில் பெய்த பருவமழை திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக பெய்தது மேலும் மிகஜாம் புயல் காரணமாக பெரியபாளையத்தில் வீடுகளில் வெள்ளம் சூழ்ந்து இப்பகுதி மக்கள் வாழ்வாதாரம் இழந்து மிகவும் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு உதவிடும் வகையில். வோல்ட் ட்ரஸ்ட் தனியார் அறக்கட்டளை மற்றும் சென்னை கூன்ஞ் அறக்கட்டளை இணைந்து பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கு நிவாரணம் பொருட்களை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வேர்ல்ட் டிரஸ்ட் நிர்வாகி டாக்டர் ஜெயஸ்ரீ பரசுராமன் தலைமை தாங்கினார்.


ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் ஏழுமலை, முன்னாள் மாவட்ட விவசாய சங்க தலைவர் செல்வராஜ்,கூன்ஞ் அறக்கட்டளை மாவட்ட உறுப்பினர் ரமேஷ, பெரியபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வேலுமையில், அருணகிரி,ராமதாஸ் ஆகியோர் கலந்துகொண்டு 100 குடும்பங்களுக்கு தல 5 கிலோ அரிசி,2 கிலோ துவரம் பருப்பு, 2.கிலோ மூக்கடலை,குளியல் சோப்பு, தார்ப்பாய், தலையணை, காலனி உள்ளிட்ட நிவாரண பொருட்களை அடங்கிய தொகுப்பினை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நவீன் குமார், காயத்ரி, வயலட் ராணி, முகிலன், திவேஷ் ஆகிய உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!