திருவாரூரில் மோர் பந்தலை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் திறந்து வைத்தார்

திருவாரூரில் மோர் பந்தலை  உணவுத்துறை அமைச்சர் காமராஜ்  திறந்து வைத்தார்

அமைச்சர் காமராஜ் மோர்பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு வழங்கினார்

திருவாரூரில் கோடைகாலத்தை முன்னிட்டு பொதுமக்கள் பயன்பெறும் விதமாக மோர் பந்தலை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் திறந்து வைத்தார் .

கோடை காலத்தை கருத்தில் கொண்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் திருவாரூர் அஇஅதிமுக மாவட்ட செயலாளர் அலுவலகம் முன்பாக மோர் பந்தலை திருவாரூர் மாவட்ட கழக செயலாளரும் ,தமிழக உணவுத்துறை அமைச்சருமான காமராஜ் தொடங்கி வைத்தார். இதில் பொதுமக்களுக்கு மோர், தர்பூசணி, இளநீர், வெள்ளரிக்காய் ஆகியவை வழங்கப்பட்டது.

இந்நிகழ்வின் போது திருவாரூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஏ.என் .ஆர் பன்னீர்செல்வம், மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சிவா ராஜமாணிக்கம், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சுரேஷ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்

Tags

Next Story