மழை நின்று ஒரு வாரம் ஆகியும் ‛பளிச்’என பொங்கி வரும் புதுவெள்ளம்

மழை நின்று ஒரு வாரம் ஆகியும் ‛பளிச்’என பொங்கி வரும் புதுவெள்ளம்
X

கண்ணாடி போல் ஓடி வரும் ஓடை நீரில் ஆட்டம் போடும் சிறுவர்கள் 

தேனி வீரப்பஅய்யனார் ஓடையில் மழைநீர் கண்ணாடி போல் சுத்தமாக வந்து கொண்டிருக்கிறது

தேனியில் மழை கடந்த ஒரு வாரமாக பெய்யவில்லை. இருப்பினும் வீரப்ப அய்யனார் கோயில் ஓடையில் மழையில் இருந்து வரும் புது வெள்ளம் ‛பளீச்’ என மாசு எதுவும் இல்லாமல் சுத்தமாக வருகிறது. இந்த நீரில் சிறுவர்கள் குளித்து விளையாடுகின்றனர்.

தேனியில் இருந்து ஆறு கி.மீ., தொலைவில் மலை அடி வாரத்தில் உள்ளது வீரப்ப அய்யனார் கோயில் இந்த கோயிலுக்கு அருகில் மலைப்பகுதியில் இருந்து வரும் தண்ணீர் ஆறு போல் ஓடிக்கொண்டே இருக்கும். ஆண்டுக்கு பல மாதங்கள் இந்த ஒடையில் தண்ணீர் இருக்கும். மிகவும் வறண்ட காலங்களில் மட்டுமே இந்த ஓடையில் தண்ணீர் வற்றும். மழை பெய்யும் போது வெள்ளமும் வரும்.

தேனி பகுதியில் மழை பெய்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகி விட்டது. அவ்வப்போது சிறு, சிறு துாறல்கள் மட்டுமே பெய்கிறது. இருப்பினும் வீரப்பஅய்யனார் கோயில் ஓடையில் தண்ணீர் பொங்கி வருகிறது. இந்த தண்ணீர் மிகவும் சுத்தமாக கண்ணாடி போல் உள்ளது.

குளிர்ச்சியுடனும், சுத்தத்துடனும் இருப்பதால் சிறுவர்கள் இந்த ஓடையில் குளித்து விளையாடுகின்றனர். இது குறித்து இங்குள்ள பொதுமக்கள் கூறுகையில், தற்போது கோயிலுக்கு தினமும் அதிகளவு பக்தர்கள் வரத்தொடங்கி உள்ளனர். ஓடையில் வரும் தண்ணீர் பக்தர்களுக்கு பெரிய அளவில் உதவியாக உள்ளது என்றனர்.

Tags

Next Story
ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்