உக்ரைனில் சிக்கியுள்ள மகனை மீட்குமாறு தேனி மாணவரின் பெற்றோர் முறையீடு

உக்ரைனில் சிக்கியுள்ள மகனை மீட்குமாறு   தேனி மாணவரின் பெற்றோர் முறையீடு
X

உக்ரைன் நாட்டில் சிக்கி தவிக்கும் தனது மகனை மீட்டுத்தரக்கோரி அவரது பெற்றோர் தேனி கலெக்டர் முரளீதரனிடம் மனு கொடுத்தனர்.

படிப்பதற்காக சென்று உக்ரைனில் சிக்கி தவிக்கும் தனது மகனை மீட்டுத்தருமாறு அவரது பெற்றோர்கள் தேனி கலெக்டரிடம் முறையிட்டனர்

தேனி அல்லிநகரத்தை சேர்ந்தவர் சரவணன். ரோகித்குமார் உக்ரைன் நாட்டில் கார்கிவ் நகரில் உள்ள நேஷனல் ஏரோஸ்பேஸ் யுனிவர்சிட்டியில் இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இந்த போர்ச்சூழலில் மகனை மீட்க முடியாமல் பெற்றோர் தவித்து வருகின்றனர். இதனால் தனது மகனை மீட்டுத்தருமாறு ரோகித்குமாரின் பெற்றோர்கள் வியாழக்கிழமை தேனி கலெக்டர் முரளீதரனை சந்தித்து முறையிட்டனர். அவர்களுக்கு தைரியம் அளித்த கலெக்டர் மத்திய அரசிடம் தெரிவித்து உங்கள் மகனை மீட்க விரைவான நடவடிக்கை எடுக்கிறேன் என உறுதியளித்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!