வாய்ப்பினை மிஸ் செய்கிறாரா இ.பி.எஸ்...?
பைல் படம்
ஈரோடு இடைத்தேர்தல் களத்தில் இரட்டை இலை சின்னம் எந்த அணிக்கு என்ற கேள்வி எழுந்த போது, தேர்தல் ஆணையம் சுப்ரீம் கோர்ட்டினை கை காட்டியது. சுப்ரீம் கோர்ட் பொதுக்குழு உறுப்பினர்கள் சேர்ந்து வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும். இப்படி தேர்வு செய்யப்பட்ட விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்து அனுமதி பெற வேண்டும். இரட்டைஇலையை தேர்தல் ஆணையம் முடக்க கூடாது என சுப்ரீம் கோர்ட் தெளிவாக உத்தரவிட்டுள்ளது. இந்த வாய்ப்பினை இ.பி.எஸ். தவற விட்டுவிட்டதாக ஆதரவாளர்கள் புலம்பி வருகின்றனர்.
பொதுக்குழுவில் 99 சதவீத பெரும்பான்மை எடப்பாடி அணிக்கு தான் இருக்கிறது. அப்படிப்பட்ட நிலையில், சுப்ரீம் கோர்ட் சுட்டிக் காட்டியதன் அடிப்படையில் ஓபிஎஸ்-சின் வேட்பாளர் பெயரையும் படிவத்தில் நாம் இணைத்திருக்க வேண்டும். ஓபிஎஸ் தரப்புக்கும் வாய்ப்பு தந்தது போல ஆகியிருக்கும்.. தமிழ்மகன் உசேனும் நடுநிலை தவறாமல் நடந்து கொண்டார் என்ற கருத்தும் உருவாகியிருக்கும்.
அதுமட்டுமல்ல, ஓபிஎஸ்-சின் வேட்பாளர் பெயரை படிவத்தில் இணைத்து பொதுக்குழுவின் ஆதரவை கேட்டிருந்தாலும் இ.பி.எஸ். வேட்பாளருக்குத்தான் பெரும்பான்மை ஆதரவு கிடைத்திருக்கும். அதனை செய்திருந்தால், நம் பலம் வெளிப்படையாக உறுதியாகியிருக்கும். ஓ.பி.எஸ்.க்கு ஆதரவு இல்லை என்பதும் உறுதி ஆகியிருக்கும். இந்த வாய்ப்பினை மிஸ் பண்ணிட்டோமே அப்படிச் செய்யாமல், ஓபிஎஸ் தரப்பின் வேட்பாளரை தவிர்த்தது மாபெரும் தவறு. இரட்டை இலையை கைப்பற்ற நமக்கு நல்ல சான்ஸை உச்சநீதிமன்றமே உருவாக்கி தந்த நிலையில், அதனை மிஸ் பண்ணிட்டோம்னுதான் தோணுகிறது என்று ஆதரவாளர்கள் எடப்பாடியிடம் ஆதங்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் சொன்ன பாயிண்டையும், எடப்பாடி பழனிசாமி சிந்தித்து வருகிறாராம்.. இதில் இன்னொன்றையும் சொல்கிறார்கள், ஒவ்வொருமுறையும் கட்சியின் நலனுக்காக ஓபிஎஸ் விட்டுக் கொடுத்து வந்த நிலையில், இந்த முறையும் கட்சிக்காக இலையை விட்டுக்கொடுத்து விட்டதை, தொண்டர்களிடம் கொண்டு செல்ல ஓபிஎஸ் டீம் தயாராகி வருகிறதாம்.நான் தான் விட்டுக்கொடுத்தேன். இரட்டை இலைக்காக விட்டுக் கொடுத்தேன் என ஓ.பி.எஸ், பிரசாரம் செய்தால் அதனை எப்படி அணுகுவது என்றும் இ.பி.எஸ். அணியினர் ஆலோசித்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu