தென்காசி : ஆடி அமாவாசை கோயில்களில் வழிபட அனுமதி இல்லை. கலெக்டர் அறிவிப்பு

தென்காசி : ஆடி அமாவாசை கோயில்களில் வழிபட அனுமதி இல்லை. கலெக்டர் அறிவிப்பு
தென்காசி மாவட்டத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு கோயில்களில் வழிபட அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள திருக்கோயில்களில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும் என்பதால், 06.08.2021 முதல் 08.08.2021 வரை சங்கரன்கோவில் அருள்மிகு.சங்கரநாராயண சுவாமி திருக்கோயிலிலும், 06.08.2021 மற்றும் 08.08.2021 ஆகிய நாட்களில் தென்காசி அருள்மிகு. காசி விஸ்வநாதசுவாமி திருக்கோயில் மற்றும் தென்காசி அருள்மிகு. மேலசங்கரன்கோயிலிலும், 06.08.2021 அன்று மட்டும் தென்காசி அருள்மிகு. அரசூர்நங்கையம்மன் திருக்கோயில் மற்றும் அருள்மிகு. மேலமுத்தாரம்மன் திருக்கோயிலிலும், 08.08.2021 அன்று மட்டும் தென்காசி அருள்மிகு பொருந்தி நின்றபெருமாள் திருக்கோயில், கரிவலம்வந்தநல்லூர் அருள்மிகு. பால்வண்ணநாதசுவாமி திருக்கோயில் மற்றும் சிவசைலம் அருள்மிகு. சிவசைலநாதர் திருக்கோயில்களில் வழிபாட்டிற்கு பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. மேலும் திருக்கோயில்களில் நடைபெறும் பூஜைகள் தொடர்ந்து நடைபெறும்.

எனவே மேற்படி நாள்களில், மேற்குறிப்பிட்ட கோவில்களுக்கு பொதுமக்கள் வருகை புரிவதை, தவிர்த்து மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கி கொரோனா பரவலை கட்டுப்படுத்த உதவுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கோபால சுந்தரராஜ் தெரிவித்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story