தென்காசியில் புதிய புறக் காவல் நிலையம்: வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

தென்காசியில் புதிய புறக் காவல் நிலையம்: வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

 தென்காசி காவல் நிலைய எல்லையான ஆசாத்நகரில் புதிதாக புறக் காவல் நிலையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.

தென்காசி நகருக்குள் இந்த புறக் காவல் நிலையத்தை கடந்த பின்னரே நுழையும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது

தென்காசியில் புதிய புறக் காவல் நிலையத்தை திறந்து வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

தென்காசி மாவட்டம், தென்காசி காவல் நிலைய எல்லையான ஆசாத்நகரில் புதிதாக புறக் காவல் நிலையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.இந்த புறக்காவல் நிலையமானது 24 மணி நேரமும் இயங்கும் விதமாகவும், திருநெல்வேலி, ஆலங்குளம், பாவூர்சத்திரம், அம்பாசமுத்திரம் மற்றும் கடையம் ஆகிய பகுதிகளில் இருந்து தென்காசி நகருக்குள் இந்த புறக் காவல் நிலையத்தை கடந்த பின்னரே நுழையும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் தென்காசி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மணிமாறன் தென்காசி காவல் நிலைய காவல் ஆய்வாளர் பாலமுருகன் மேலும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

Tags

Read MoreRead Less
Next Story