தென்காசியில் காணாமல் போன ரூபாய் 7 லட்சம் மதிப்புள்ள செல்போன்களை மீட்பு

தென்காசியில் காணாமல் போன ரூபாய் 7 லட்சம் மதிப்புள்ள செல்போன்களை மீட்பு

மீட்கப்பட்ட செல்போன்களை அதன் உரிமையாளர்களிடம் காவல் கண்காணிப்பாளர் ஒப்படைத்தார்

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காணாமல் போன ரூ. 7 லட்சம் மதிப்புள்ள 51 செல்போன்களை காவல்துறையினர் மீட்டனர்.

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் அவர்களின் உத்தரவுப்படி தென்காசி மாவட்டம் முழுவதும் செல்போன்கள் காணாமல் போனதாக மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வந்த புகார் பதிவு செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து கூடுதல் கண்காணிப்பாளர் சுவாமிநாதன் தலைமையில் காவல் துறையினரின் துரித நடவடிக்கையால் தொலைந்த மற்றும் தவறவிட்ட ரூபாய் 7 லட்சம் மதிப்பிலான 51 செல்போன்கள் மீட்கப்பட்டது. மேற்படி மீட்கப்பட்ட செல்போன்கள் அதன் உரிமையாளர்களிடம் மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து காவல் கண்காணிப்பாளர் ஒப்படைத்தார்.

மேலும் சைபர் கிரைம் குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார். பின்னர் சிறப்பாக பணிபுரிந்து செல்போன்களை மீட்டு கொடுத்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.

Tags

Read MoreRead Less
Next Story