தென்காசி மாவட்டத்தில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரே நாளில் 5 பேர் கைது

தென்காசி மாவட்டத்தில் தொடர் கஞ்சா விற்பனை மற்றும் கொலை குற்றத்தில் சம்பந்தப்பட்ட 5 நபர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீ்ழ் ஒரே நாளில் கைது செய்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது

தென்காசி மாவட்டத்தில் ஒரே நாளில் 5 நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்

தென்காசி மாவட்டத்தில் தொடர் கஞ்சா விற்பனை மற்றும் கொலை குற்றங்களில் சம்பந்தப்பட்ட 5 நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தென்காசி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட தென்காசி எஸ்.கே.பி. தெருவை சேர்ந்த சாகுல் ஹமீது என்பவரின் மகன் முகமது அலி என்ற கஞ்சா அலி (31),கீழ பேட்டை பகுதியை சேர்ந்த பீர்முகமது என்பவரின் மகன் பாதுஷா (41) மற்றும் மங்கம்மாள் சாலை பகுதியைச் சேர்ந்த துரை என்பவரின் மகன் கார்த்திக் என்ற யமஹா கார்த்திக்(24) ஆகிய மூன்று நபர்கள் மீது தென்காசி காவல் ஆய்வாளர் பாலமுருகன் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தார்.

இதை போல், ஆய்க்குடி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஆய்க்குடி பகுதியை சேர்ந்த பாண்டி என்பவரின் மகன் பாண்டியராஜ் என்ற பாஸ்கர் மீது ஆய்க்குடி வட்ட காவல் ஆய்வாளர் வேல்கனி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தார்.

சொக்கம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த முகமது கோதரி என்பவரின் மகன் முகம்மது மைதீன் என்ற நபர் மீது புளியங்குடி காவல் ஆய்வாளர் ராஜாராம் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தார்.இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் அளித்த பரிந்துரை அறிக்கையின்படி மாவட்ட ஆட்சியர் இந்த 5 பேரையும் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.

தென்காசி மாவட்டத்தில் ஒரே நாளில் 5 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் காவல்துறையினர் மேற்கொண்ட இந்த அதிரடி நடவடிக்கை சமூக விரோதச்செயல்களில் ஈடுபடுவர்களுக்கு எச்சரிக்கை விடுப்பதாக அமைந்துள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story