நான்கு வழிச்சாலை வேன் ஸ்டாண்டிற்கு மாற்று இடம் வழங்க வேண்டும். டிரைவர்கள் கோரிக்கை

நான்கு வழிச்சாலை வேன் ஸ்டாண்டிற்கு மாற்று இடம் வழங்க வேண்டும். டிரைவர்கள் கோரிக்கை
நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை : வேன் ஸ்டாண்டிற்கு மாற்று இடம் வழங்க வேண்டும். டிரைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாவூர்சத்திரம் வேன் ஸ்டாண்ட் பகுதியில் நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை வருவதால் மாற்று இடம் வழங்க வேண்டுமென ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருநெல்வேலி - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் திருநெல்வேலியிலிருந்து தென்காசி வரை நான்கு வழிச்சாலை பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன. இதில், சுமார் 100 வேன்கள் உள்ள பாவூர்சத்திரம் வேன் ஸ்டாண்ட் பகுதியிலும் சாலை அமைக்கப்படுகிறது. இதனால் வேன்களை நிறுத்த இடம் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த வேன் ஓட்டும் தொழிலை நம்பி, சுமார் 400 -க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருந்து வருகின்றன. இதனைக் கவனத்தில் கொண்டு பாவூர் சத்திரம் வேன் ஸ்டாண்டுக்கு நகரின் பிற பகுதிகளில் பொதுமக்கள் எளிதில் அணுகும் வகையிலும், மாற்று இடத்தை ஒதுக்கீடு செய்ய மாவட்ட நிர்வாகமும் சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

இந்த, கோரிக்கையை வலியுறுத்தி சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட காங்கிரஸ் தலைவருமான எஸ். பழனிநாடாரிடம் பாவூர்சத்திரம் வேன் ஸ்டாண்ட் ஓட்டுனர்கள் மனு அளித்தனர்.மனுவை பெற்றுக்கொண்ட, சட்டமன்ற உறுப்பினர், அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று, பொதுமக்களும், ஓட்டுனர்களும் பயன்பெறும் வகையில் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

தொடர்ந்து, வேன் ஓட்டுனர்கள் குடும்பத்திற்கு, கொரோனா நிவாரண உதவியாக அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களை வழங்கினார்.இதில், இளைஞர் காங்கிரஸ் சுப்பையா, சுரண்டை திமுக முன்னாள் செயலாளர் ஆறுமுகசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story