நாகர்கோவில் மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு உரம் விற்பனை தொகை

நாகர்கோவில் மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு உரம் விற்பனை தொகை
X

தூய்மை பணியாளர்களுக்கு நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் உரம் விற்பனை தொகை வழங்கினார்.

நாகர்கோவில் மாநகராட்சியில் உரம் விற்பனை தொகை தூய்மை பணியாளர்களுக்கு பிரித்து வழங்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை நுண் உர செயலாக்க மையத்தில் மட்கும் கழிவுகள் உரமாக்கப்பட்டு உரம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதனிடையே உரம் விற்பனை செய்யப்பட்ட தொகை 2,48,965 ரூபாயினை 207 தூய்மை பணியாளர்களுக்கும் பிரித்து வழங்கப்பட்டது.

இதனை நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் முன்னிலையில் மாநகராட்சி மேயர் மகேஷ் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கினார்.

Tags

Next Story
கடம்பூரில் வெடிபொருட்கள் பதுக்கிய 5 பேரை கைது செய்த போலீஸ்!