கன்னியாகுமரி மாட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தேரோட்டம்

கன்னியாகுமரி மாட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தேரோட்டம்
X

சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில் தேரோட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது.

கன்னியாகுமரி மாட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

குமரி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி பெருந்திருவிழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்தது. 9-ம் திருவிழாவான நேற்று முன்தினம் காலையில் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. சுவாமி தேர், அம்மன் தேர், பிள்ளையார் தேர் ஆகிய மூன்று தேர்கள் உலா வந்தன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்துஇழுத்து சாமி தரிசனம் செய்தனர்.

நள்ளிரவு 12 மணிக்கு சப்தாவர்ணம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி ரிஷப வாகனத்தில் தாணுமாலய சாமியும், அன்ன வாகனத்தில் அறம் வளர்த்த நாயகி அம்மனும், கருட வாகனத்தில் திருவேங்கட விண்ணவரான பெருமாளும் வீதி உலா வந்து கோவிலை வந்தடைந்தனர். அதன் பிறகு மருங்கூர் முருகன், கோட்டார் வலம்புரி விநாயகர், வேளிமலை குமாரசுவாமி எதிரெதிரே காட்சியளித்தனர். பிறகு அனைத்து தெய்வங்களுக்கும் ஒன்றுபோல் தீபாராதனை நடந்தது.

அப்போது தாணுமாலய சாமி ரிஷப வாகனத்தில் அமர்ந்து தனது மக்களை பிரிய மனமில்லாமல் கோவில் சன்னிதானத்தில் முன்னும் பின்னுமாக அசைந்து அசைந்து செல்வதும், திரும்புவதுமாக பலமுறை நடந்தது. இந்த காட்சியை காண நள்ளிரவு ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்தனர்.

பெண்கள் குலவையிட்டு, மங்கல ஒலி எழுப்பிடவும், மேளதாளம் முழங்கவும் வாகனங்களில் இருந்து தாய்-தந்தையர் கோவிலை சென்றடைந்தனர். இந்த காட்சியை காண வந்த பக்தர்கள் பலரும் இரவு கோவிலிலேயே தங்கி தொடர்ந்து இன்று அதிகாலை நடந்த ஆருத்ரா தரிசனத்தை கண்டுகளித்தனர். நேற்று மாலை 5 மணிக்கு நடராஜர் திருவீதி உலா வருதல் நிகழ்ச்சியும், இதைத்தொடர்ந்து பரதநாட்டிய நிகழ்ச்சியும்நடக்கிறது. இரவு 9 மணிக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!