வீடுகளில் பூட்டை உடைத்து டிவி, சிலிண்டர் திருடிய தந்தை மகன் கைது

வீடுகளில் பூட்டை உடைத்து டிவி, சிலிண்டர்  திருடிய தந்தை மகன் கைது
X

கைது செய்யப்பட்ட தந்தை மகன்.

கன்னியாகுமரி மாவட்டத்தி் வீடுகளில் பூட்டை உடைத்து டிவி, சிலிண்டர் திருடிய தந்தை மகனை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் காவல்நிலையம் அருகே பள்ளி தலைமையாசிரியர் ஒருவரின் ஜந்து பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற கட்டிமாங்கோடு பகுதியை சேர்ந்த சிவசங்கர் மற்றும் சிவா ஆகிய தந்தை மகன் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவுபடி, நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் கோட்டார் காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் சிறப்பு தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் சரவணகுமார், தலைமை காவலர் விஜயகுமார்,சிபு ரீகன்,சிவக்குமார்,மற்றும் கிருஷ்ண பிரசாத் ஆகியோர்கள் இன்று குற்றவாளிகள் தந்தை மகன் இருவரையும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து தங்கசங்கிலியை போலீசார் முதலில் பறிமுதல் செய்தனர் மேலும் வடிவேலு பட பாணியில் வடசேரி மற்றும் ராஜாக்கமங்கலம் பகுதியில் வீடுகளில் இருந்த எல்.இ.டி டிவி,ஹோம் தியேட்டர்,வெண்கல குத்துவிளக்கு,பானை,கேஸ் சிலிண்டர் ஆகிய பொருட்களையும் அவர்கள் திருடியது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.பின்னர் தந்தை மகன் ஆகிய இருவரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவதனம் வெகுவாக பாராட்டினார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!