/* */

ஊராட்சி மன்ற தலைவர் வீட்டில் கல்வீச்சு தொடர்பாக மூவர் கைது

ஊத்துக்காடு ஊராட்சி மன்ற தலைவர் வீட்டின் மீது முன்விரோதம் காரணமாக கல் எறிந்து இரு சக்கர வாகனத்தை சேதப்படுத்திய வழக்கில் காவல்துறையினர் மூவரை கைது செய்தனர்

HIGHLIGHTS

ஊராட்சி மன்ற தலைவர் வீட்டில் கல்வீச்சு தொடர்பாக மூவர் கைது
X

ஊராட்சி மன்ற தலைவர் வீட்டில் மீது தாக்குதல் நடத்தியவர்கள் 

ஊத்துக்காடு ஊராட்சி மன்ற தலைவர் வீட்டின் மீது முன்விரோதம் காரணமாக கல் எறிந்து இரு சக்கர வாகனத்தை சேதப்படுத்திய வழக்கில் 3 பேர் கைது செய்த வாலாஜாபாத் காவல் துறையினர் அவர்களை நீதிமன்றத்தில் அஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் ஊத்துக்காடு கிராம ஊராட்சி மன்ற தலைவராக உள்ளவர் சாவித்திரி மணிகண்டன்.

ஊத்துக்காடு கிராமத்தில் உள்ள இவரது வீட்டின் மீது நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் சிலர் கல்லெறிந்து விட்டு, இருசக்கர வாகனத்தை அடித்து நொறுக்கி விட்டு சென்றனர். சிசிடிவி கேமராவில் இச்சம்பவம் பதிவாகியிருந்தது.

இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் சாவித்திரி மணிகண்டன் அளித்த புகாரின் பேரில் வாலாஜாபாத் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் ஊராட்சி மன்ற தலைவரின் வீட்டில் பதிவாகி இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து மறு மாணவர்களை அடையாளம் காணும் பணியை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் சாவித்திரி மணிகண்டன் வெற்றி மீது தாக்குதல் நடத்தியவர்கள் அடையாளம் காணப்பட்டது.

இதைதொடர்ந்து சென்னை கண்ணம்மாபேட்டையைச் சேர்ந்த சஞ்சய் வயது 18, மறைமலை கீழ்க்கரணை பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் வயது 24 , திவாகர் வயது 24 ஆகிய மூன்று பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

காவல்துறையின் தீவிர விசாரணையில் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மணிகண்டனுக்கும், ஊத்துக்காடு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டதாகவும் அதனைத் தொடர்ந்து இருதரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்த நிலையில் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சுரேஷின் உறவினர்களான மூவரும் முன்பு விரோதத்தை மனதில் வைத்துக் கொண்டு ஊராட்சி மன்ற தலைவர் வீட்டில் மீது தாக்குதல் நடத்தியதை ஒப்புக்கொண்டனர்.

இதைதொடர்ந்து இளைஞர்கள் மூவரையும் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வாலாஜாபாத் காவல்துறையினர் புழல் சிறையில் அடைத்தனர்.

Updated On: 14 Nov 2023 2:10 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    பூமியின் முதல் செல் எப்படித் தோன்றியது..? இந்திய விஞ்ஞானிகள்...
  2. நாமக்கல்
    எருமப்பட்டியில் நாளை, நாமக்கல்லில் 20ம் தேதி மின்சார நிறுத்தம்...
  3. நாமக்கல்
    கூடுதல் கட்டணம் வசூலித்த தனியார் பஸ் பர்மிட்டை ஏன் ரத்து...
  4. சுற்றுலா
    ஜாலியா ஒரு டூர் போவோமா..? மனசு லேசாகும்ங்க..!
  5. கல்வி
    விமானி பயிற்சி பள்ளியை அமைக்கும் ஏர் இந்தியா
  6. லைஃப்ஸ்டைல்
    உங்கள் வருமானத்தை எவ்வாறு அதிகரிப்பது?
  7. உலகம்
    அமெரிக்காவில் கொடி கட்டிப்பறக்கும் இந்தியர்கள்..!
  8. தமிழ்நாடு
    மொட்டைக்கடிதம் எழுதிய போலீஸ்..! 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பணி..!
  9. அரசியல்
    அதிமுகவில் மீண்டும் குழப்பம் : செங்கோட்டையனை துாண்டுகிறார்களா?
  10. இந்தியா
    பஞ்சாப் போலி என்கவுன்ட்டர்! 31 வருடங்களுக்குப் பிறகு தீர்ப்பு