அரசு ஆலோசனைகளை கண்டுகொள்ளாத கல் குவாரி ஆலைகள்

அரசு ஆலோசனைகளை கண்டுகொள்ளாத  கல் குவாரி ஆலைகள்

வாகன ஓட்டிகளுக்கு இடையூறு அளிக்காத வண்ணம் லாரிகள் தார்ப்பாய் கொண்டு மூடப்பட்டுள்ள காட்சி.

வாகன விபத்து மற்றும் சாலை சேதத்தை தவிர்க்க அதிக பாரம் ஏற்ற வேண்டாம் என கல் குவாரி, அறுவை ஆலை உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆர்ப்பாக்கம் மாகரம் திருமுக்கூடல் மதூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நூற்றுக்கணக்கான கல் குவாரிகளும் கல் அரவை நிலையங்களும் செயல்பட்டு வருகிறது.

நாள்தோறும் இங்கிருந்து பல நூறு கனரக வாகனங்கள் நாள்தோறும் வந்து கட்டுமான பொருட்களுக்கு தேவையான பொருட்களை சென்னை புறநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச் செல்கிறது.

நீண்ட தூரம், குறைந்த வருமானம் என்ற காரணத்தினால் கனரக லாரிகள் அரசு விதிமுறைகளை மீறி அதிக பாரங்கள் ஏற்றி செல்வதை வாடிக்கையாக வைத்து வருகிறது. இது போன்ற நிலைகளில் சாலைகள் சேதம் அடைதல், வாகன விபத்து நேருதல் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு சாலையில் செல்ல முடியாத அளவில் சிரமங்களை அளிப்பதாக பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்பு புகார் அளித்தனர்.

இதன் அடிப்படையில் தமிழக அரசின் விதிமுறைகளை மீறி செயல்படக் கூடாது என கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை இணை இயக்குனர் முனைவர் வேடியப்பன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கல் குவாரி உரிமையாளர்கள் அறவை நிலைய உரிமையாளர்கள் லாரி உரிமையாளர்கள் என அனைவருக்கும் ஆலோசனை வழங்கப்பட்டும், காஞ்சிபுரம் மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் வாகன விபத்துகளை தவிர்த்தல் குறித்த ஆலோசனைகளையும் வழங்கினார்.

இக்கூட்டத்தில் மிக முக்கியமாக லாரிகளுக்கு அதிக பாரம் ஏற்ற அனுமதிக்க கூடாது என கல் அரவை நிலையங்களுக்கும், அதிக பாரங்களை ஏற்ற மாட்டோம் என லாரி உரிமையாளர்களும் முடிவெடுத்து இதனை பின்பற்றும் வகையில் அது குறித்த பதாகைகள் கல் அரவை நிலையங்களிலும் கல் குவாரிகளிலும் வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டது.

அதிக பாரம் ஏற்ற அனுமதிக்க மாட்டோம் என கூறி வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகை.

இந்நிலையில் இக்கூட்டம் ஒரு வாரம் ஆகிய நிலையில் ஒரு சில கல் அரவை நிலையில் மட்டும் இது குறித்த விளம்பர பதாகைகள் வைத்துள்ளது. மற்ற நிலையங்கள் அனைத்தும் அரசு விதிகளை பின்பற்றாமல் அரசை ஏமாற்ற அது குறித்த பேனர் வைக்கப்பட்டதாக வாட்ஸ் அப்பில் அலுவலருக்கு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் லாரி உரிமையாளர்கள் அனைவரும் கொண்டு செல்லும் பொருட்களை தார்ப்பாய் கொண்டு தற்போது மூடி செல்லும் நிலை கண்டு பொதுமக்கள் சற்று மகிழ்ச்சியடைந்தாலும், அதிக பாரங்களை ஏற்ற அனுமதிக்க கூடாது என்ற முடிவை 100% அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Tags

Next Story