காஞ்சி மாவட்ட நீதிபதி தலைமையில் சர்வதேச யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி

காஞ்சி மாவட்ட நீதிபதி தலைமையில் சர்வதேச யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி

பிரம்ம குமாரிகள் சங்கம் சார்பில் யோகா பயிற்சி காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்களுக்கு பயிற்சி அளித்த போது

காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட நீதிபதி செம்மல் தலைமையில் யோகாசனம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

சர்வதேச யோகா தினத்தை ஒட்டி காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட நீதிபதி செம்மல் தலைமையில் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டு யோகாசனம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

யோகா பயிற்சியில் நன்மைகள் குறித்து உலக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டு தோறும் ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது.

யோகாசனம் மேற்கொள்வதால் உடல் வலிமை , மனசு சோர்வு நீக்குதல் உள்ளிட்ட பல்வேறு பயன்கள் கிடைப்பதால் சிறுவர் முதல் மூத்த குடிமக்கள் வரை நாள் தோறும் யோகாசனம் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

அவ்வகையில் இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட நீதிபதி யூ.செம்மல் தலைமையில் , யோகா தினத்தில் யோகாசன பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

சர்வதேச யோகா தினத்தை ஒட்டி காஞ்சிபுரம் நீதிமன்ற வளாகத்தில் யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நீதிபதிகள்

மேலும் இந்நிகழ்வில் காஞ்சிபுரம் பிரம்ம குமாரிகள் சங்கம் சார்பில் யோகாசனம் எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் மற்றும் மன அமைதி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியும் சகோதரிகள் நிகழ்த்தினர்.

இந்நிகழ்ச்சியில் நீதிபதிகள் திருமால் , அருண் சபாபதி , வசந்தகுமாரி, வாசுதேவன், சதீஷ்குமார் , ராஜேஸ்வரி வழக்கறிஞர்கள் சங்க தலைவர் கண்ணன் , சிவகோபு , திருப்பதி முரளிகிருஷ்ணன் மற்றும் வழக்கறிஞர்கள் ரமேஷ்குமார் , காமேஷ்குமார் , நீதிமன்ற ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story