காஞ்சிபுரத்தில் நாளை விடுமுறை இல்லை என ஆட்சியர் ஆர்த்தி அறிவிப்பு

காஞ்சிபுரத்தில் நாளை விடுமுறை இல்லை என ஆட்சியர் ஆர்த்தி அறிவிப்பு

ஓணம் பண்டிகை கொண்டாடும் பெண்கள் (பைல் படம்).

காஞ்சிபுரத்தில் நாளை ஓணம் பண்டிகைக்காக விடுமுறை இல்லை என மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அறிவித்து உள்ளார்.

கேரள மாநிலத்தில் மிக முக்கியமாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்திலும் கேரள மாநில மக்கள் அதிக அளவில் வசித்து வருவதால் தமிழகத்தில் சில மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது.

மேலும் சென்னை, காஞ்சிபுரம் , செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்கள் உள்ளூர் விடுமுறை தேவைப்படும் எனில் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்கள் நாளை உள்ளூர் விடுமுறை தினம் இல்லை எனவும் அரசு துறை அலுவலர்கள் வழக்கம்போல் பணிக்கு வர வேண்டும் எனவும் சுற்றறிக்கையை துறை ரீதியாக அனுப்பி உள்ளனர்.

இதேபோல் இந்த இரு மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நாளை பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் எனவும், குறுஞ்செய்தி மூலம் பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story