/* */

திண்டுக்கல் வந்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு முன்னாள் அமைச்சர்கள் வரவேற்பு

அதிமுக ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்பட்ட ஓபிஎஸ் இன்று திண்டுக்கலில் நடந்த கட்சி நிர்வாகி திருமண விழாவில் பங்கேற்றார்

HIGHLIGHTS

திண்டுக்கல் வந்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு முன்னாள் அமைச்சர்கள் வரவேற்பு
X

திண்டுக்கல் வந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்-ஐ வரவேற்ற முன்னாள் அமைச்சர்கள் சீனிவாசன், நத்தம் விசுவநாதன் உள்ளிட்டோர்

திண்டுக்கல் வருகை தந்த கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சி. சீனிவாசன், நத்தம் இரா.விசுவநாதன் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

நடந்து முடிந்த அதிமுக தலைமைக் கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலில் முன்னாள் முதல்வர்கள் ஓ. பன்னீர்செல்வம்,எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் மீண்டும் போட்டியின்றி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளராக மீண்டும் தேர்வு செய்யப்பட்ட ஓ பன்னீர்செல்வம் இன்று திண்டுக்கலில் நடந்த அதிமுக நிர்வாகியின் வீட்டுத்திருமண விழாவிற்கு வருகை தந்தார். இதை முன்னிட்டு, முன்னாள் அமைச்சரும் திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளருமான திண்டுக்கல் சி. சீனிவாசன் தலைமையில் பொன்னாடை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வத்தலகுண்டு பைபாஸ் சாலையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் இரா. விசுவநாதன் தலைமையில் ரவுண்டானா ரோடு பகுதியில் ஆள் உயர மாலை அணிவிக்கப்பட்டு உற்சாக வரவேற்ப்பு அளிக்கப்பட்டது.பின்னர் திருமண நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சி. சீனிவாசன், நத்தம் இரா. விசுவநாதன், செங்கோட்டையன், ராஜன் செல்லப்பா, ஆர்.பி. உதயகுமார் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் திண்டுக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 10 Dec 2021 4:15 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மோடியிடம் மொத்தமாக சரண்டர் ஆன ஜெகன் மோகன் ரெட்டி
  2. கரூர்
    கரூரில் வருகிற 21-ந்தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
  3. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் திறப்பு விழா கண்டும் பயன்பாட்டிற்கு வராத மீன்மார்க்கெட்
  4. இந்தியா
    உலகின் உயரமான ரயில்பாதை சோதனை ஓட்டம் வெற்றி
  5. இந்தியா
    இந்தியாவின் ஸ்டைலில் மாறி வரும் உலகம்
  6. கல்வி
    வெளிநாட்டில் படிக்க போறீங்களா.. இதைப்படிங்க
  7. கல்வி
    உலகின் சிறந்த பள்ளிகளாக 5 இந்தியப் பள்ளிகள் தேர்வு
  8. கல்வி
    பிடெக் படிப்புகளுக்கான ஐஐஎஸ்டி தரவரிசை பட்டியல் வெளியீடு
  9. ஈரோடு
    ஈரோட்டில் சமூக நீதிக் கூட்டமைப்பினரின் பாராட்டு விழா
  10. கடையநல்லூர்
    சுதந்திர போராட்ட தியாகி வீரன் வாஞ்சிநாதனின் நினைவு நாள்..!