மாற்றுத் திறனாளிகள் குடும்பத்தினருக்கு புத்தாடை மளிகை பொருட்கள் வழங்கிய "லிட் தி லைட்"

மாற்றுத் திறனாளிகள் குடும்பத்தினருக்கு புத்தாடை மளிகை பொருட்கள் வழங்கிய லிட் தி லைட்

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வருகின்ற லிட் தி லைட் என்ற தனியார் அறக்கட்டளை சார்பில் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான உதவிகளை வழங்கி வருகின்றனர்.

மாற்றுத் திறனாளிகள் குடும்பத்தினருக்கு தீபாவளி பண்டிகைக்காக புத்தாடை, இனிப்பு, மளிகை பொருட்களை "லிட் தி லைட்" வழங்கியது

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வருகின்ற லிட் தி லைட் என்ற தனியார் அறக்கட்டளை சார்பில் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான உதவிகளை வழங்கி வருகின்றனர்.

கடந்த ஓராண்டு காலமாக கொரோனா பொது முடக்கத்தால் வருவாய் இல்லாமல் தவித்து வரும் பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு மாவட்டம் தோறும் அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்திலுள்ள 66 மாற்றுத் திறனாளிகள் குடும்பத்தினருக்கு தீபாவளி பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது . கொரோனா முடக்கத்தால், வருவாய் இல்லாமல், பார்வையற்ற மாற்று திறனாளிகள் தவித்து வருகின்றார். இதனால் மாற்றுத் திறனாளிகள் குடும்பத்தினர் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் வகையில் புத்தாடைகள், இனிப்பு மற்றும் கார வகை பலகாரங்களை வழங்கினர்.

மேலும் தீபாவளி பண்டிகைக்காக அரிசி, பருப்பு உள்ளிட்ட 10 வகை மளிகைப் பொருட்களையும் தனியார் அறக்கட்டளையினர் வழங்கினார். இந்த பார்வையற்ற மாற்று திறனாளிகளுக்கு உதவியாக இருந்த தன்னார்வலர்களை பாராட்டி கேடயங்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் அறக்கட்டளை நிர்வாகி பரத், தர்மபுரி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலர் செண்பகவள்ளி, தர்மபுரி தேர்தல் பிரிவு வட்டாட்சியர் சுகுமார், ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அலுவலர் ராஜசேகர், தனியார் பல்பொருள் அங்காடி உரிமையாளர் துரைராஜ் மற்றும் தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story