தருமபுரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா

தருமபுரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில்   8 பேருக்கு கொரோனா
X
தருமபுரி மாவட்டத்தில் தொற்று பரவல் குறைவாகவே காணப்படுகிறது. மொத்த பாதிப்பு 54 ஆக உள்ளது. 8 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது. தினமும் ஆயிரத்தை கடந்து கொரோனா தொற்று பதிவாகி வருகிறது.

அந்த வகையில், தருமபுரி மாவட்டத்தில் தொற்று பரவல் குறைவாகவே காணப்படுகிறது. மொத்த பாதிப்பு 54 ஆக உள்ளது. 8 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை எடுத்து வருகின்றனர்.

இதில் நேற்று 2 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டுக்கு சென்றுள்ளனர். மற்ற மாவட்டங்களை காட்டிலும் தருமபுரியில் கொரோனா தொற்று பரவல் குறைவாகவே காணப்படுகிறது. அனைவரும் கட்டாயமாக முககவசம் அணிந்து செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுரை வழங்கி வருகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!