இரண்டு விடுதிகளுக்கு சீல் ; காவல்துறையினர் நடவடிக்கை

இரண்டு விடுதிகளுக்கு சீல் ;  காவல்துறையினர் நடவடிக்கை
X

விடுதிகளுக்கு சீல் வைத்த வட்டாச்சியர்

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பரிந்துரையின் பேரில், மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் சீல் வைத்தார்.

கோவை மாவட்டத்தில் நடைபெறும் சட்ட விரோத செயல்களை தடுக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் அறிவுறுத்தலின் பேரில், காவல் துறையினர் செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் மேட்டுப்பாளையம் காவல் நிலைய பகுதியில் உள்ள உதகை - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தனியார் காட்டேஜ் ஒன்றில் சட்டத்திற்கு விரோதமாக பாலியல் தொழில் நடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் வந்தது.

இதன் பேரில் அங்கு சோதனை செய்த காவல் துறையினர் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 4 நபர்களை கைது செய்தனர். அதேபோல் மற்றொரு தனியார் விடுதியில் பாலியல் தொழிலில் பெண்களை ஈடுபடுத்திய பெண் உட்பட மூன்று நபர்களை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர். இந்த இரண்டு வழக்குகளிலும் கைது செய்யப்பட்ட நபர்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

பாதிக்கப்பட்ட 3 பெண்கள் அரசு காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்ட 2 தனியார் விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பரிந்துரையின் பேரில் இன்று, மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் இரண்டு விடுதிகளுக்கும் சீல் வைத்தார்.

இதேபோல மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தனிப்படையினரால் சோதனை மேற்கொள்ளப்பட்டு பெண்களை பாலியல் தொழில் குற்றங்களில் ஈடுபடுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும், சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
ai based healthcare startups in india