வருமான வரித்துறை நோட்டீஸை ரத்து செய்யக் கோரி, கார்த்திக் சிதம்பரம் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

வருமான வரித்துறை நோட்டீஸை ரத்து செய்யக் கோரி, கார்த்திக் சிதம்பரம் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
X

சிவகங்கை தொகுதி எம்பி கார்த்திக் சிதம்பரம் ( பைல் படம்)

சிவகங்கை தொகுதி எம்பி கார்த்தி சிதம்பரம், அவரது மனைவி ஸ்ரீநிதி கார்த்தி ஆகியோர் வருமான வரித்துறை நோட்டீஸை ரத்து செய்யக்கோரி, தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியம், 2014-15, 2015-16 ஆண்டுகளுக்கான வருமான வரி மறுமதிப்பீட்டிற்காக அனுப்பப்பட்ட நோட்டீசை ரத்து செய்ய மறுத்து விட்டார்.

மேலும், வருமான வரிக் கணக்குகளுக்கான மதிப்பீட்டையும், மறு மதிப்பீட்டையும் துவங்காத நிலையில், வருமான வரித்துறையின் நோட்டீசை எதிர்த்து வழக்கு தொடர முடியாது என நீதிபதி தெரிவித்தார்.

மேலும் ரூ.6 கோடி 38 லட்சம் மறைப்பு

2015ம் ஆண்டு அக்னி எஸ்டேட்ஸ் பவுன்டேசன் என்ற நிறுவனத்துக்கு முட்டுக்காடு நிலத்தை விற்பனை செய்த விவகாரத்தில் 6 கோடியே 38 லட்சம் ரூபாய் வருமானத்தை கார்த்தி சிதம்பரம் மறைத்து விட்டதாக வருமான வரித்துறை குற்றஞ்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!