திருநங்கைகளுக்கு இனிப்பான செய்தி கொடுத்த சென்னை கலெக்டர்!

திருநங்கைகளுக்கு இனிப்பான செய்தி கொடுத்த சென்னை கலெக்டர்!
X
வேலைவாய்ப்பில் பயன்பெற திருநங்கைகளுக்கு சென்னை கலெக்டர் சீதா லட்சுமி அழைப்பு விடுத்துள்ளார்.

சென்னையில் துவங்க உள்ள பாதுகாப்பு மற்றும் திறன் வளர்ப்பு இல்லத்தில் பணிபுரிய திருநங்கையருக்கு மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி அழைப்பு விடுத்துள்ளார்.

மத்திய அரசின் சமூக நீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் திருநங்கையருக்கு பாதுகாப்பு மற்றும் திறன் வளர்ப்பு இல்லம் சென்னையில் துவங்கப்பட உள்ளது. அரசு சாரா அமைப்பில் இயங்கயுள்ள இந்த இல்லத்தில் பணிபுரிய, கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திட்ட மேலாளர், கணக்காளுமை உதவியாளர், ஆற்றுப்படுத்துனர், பகுதி நேர மருத்துவர், சமையலர், சுத்தம் செய்பவர், காவல் பணியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. திருநங்கையருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

தகுதியுடையோர் உரிய ஆவணங்களுடன், கரிமா க்ரஹ், சி- 122/69, கார்த்திகேயன் சாலை, பெரியார் நகர், சென்னை - 82 என்ற முகவரிக்கு தபாலில் அனுப்பலாம்.அதேபோல், garimagrehtra@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும், 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை கலெக்டர் சீதாலட்சுமி தெரிவித்துஉள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!