அரியலூர் மாவட்டத்தில் காவல் துறை சார்பில் குழந்தைகள் வாரம் கொண்டாட்டம்

அரியலூர் மாவட்டத்தில் காவல் துறை  சார்பில் குழந்தைகள் வாரம் கொண்டாட்டம்

அரியலூரில் நடந்த குழந்தைகள் வார கொண்டாட்டத்தின்போது போலீசார் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

அரியலூர் மாவட்ட காவல் துறை சார்பில் குழந்தைகள் வாரம் கொண்டாடப்பட்டது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காவல் உட்கோட்டத்தில் தண்டலை, காட்டாத்தூர்,வெத்தியார்வெட்டு, வாழைக்குறிச்சி, இடையார், பரணம், காசான்கோட்டை, கோமன் ஆகிய ஆகிய கிராமங்களில் காவல் துறை சார்பில் குழந்தைகள் வாரம் கொண்டாடப்பட்டது.

இதனைத்தொடர்ந்து அப்பகுதி மக்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். மேலும் அப்பகுதியில் வசிக்கும் மக்களிடம் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

Tags

Read MoreRead Less
Next Story