அரியலூர் மாவட்டத்தில் இன்று 48,831 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி

அரியலூர் மாவட்டத்தில் இன்று 48,831 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி

அரியலூர் மாவட்டத்தில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் ரமண சரஸ்வதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அரியலூர் மாவட்டத்தில் 5 வது மாபெரும் சிறப்பு முகாமில் மொத்தம் 48,831 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தமிழக முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க அரியலூர் மாவட்டத்தில் 5 ஆம் கட்டமாக 10.10.2021 இன்று மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் 300 இடங்களில் நடைபெற்றது. ஒவ்வொரு கிராமத்திலும் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டது. அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற 5ஆம் கட்ட முகாமில் 48,831 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

அரியலூர் மாவட்டத்தில் முதல்கட்டமாக 12.09.2021 அன்று நடைபெற்ற சிறப்பு முகாமில் 47,125 நபர்களுக்கும், இரண்டாம் கட்டமாக 19.09.2021 அன்று நடைபெற்ற சிறப்பு முகாமில் 17,944 நபர்களுக்கும், மூன்றாம் கட்டமாக 26.09.2021 அன்று நடைபெற்ற சிறப்பு முகாமில் 50,714 நபர்களுக்கும், நான்காம் கட்டமாக 32311 கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

அரியலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 48,831 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தின் முலம் மொத்தம் 1,97,152 நபர்கள் 5 மாபெரும் சிறப்பு முகாமில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு பயனடைந்து உள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளில் ஈடுபட்ட ஊராட்சி மன்றத்தலைவர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், ஊரக வளர்ச்சித் துறையின் பணியாளர்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப் அலுவலர்கள், வருவாய் துறையின் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், பொதுசுகாதாரத் துறை பணியாளர்கள், கிமிஞிஷி கட்டுப்பாட்டு துறையினர் என மக்களை ஒருங்கிணைக்கும் பணிகளில் ஈடுபட்ட அனைவருக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் தனது வழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story