திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர்கள் வழங்கல்

திருச்சுழி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 982 பயனாளிகளுக்கு ரூ.218.40 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டன;

Update: 2021-12-12 08:30 GMT

விருதுநகர் மாவட்டம்,காரியாபட்டியில் நடந்த விழாவில் பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர்கள் தங்கம்தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன்.

திருச்சுழி தொகுதியில் பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம்,  திருச்சுழி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 982 பயனாளிகளுக்கு ரூ.218.40 இலட்சம் மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர், மற்றும் தொழில்துறை அமைச்சர் ஆகியோர்கள் வழங்கினர்.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில், தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி, தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருச்சுழி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 964 பயனாளிகளுக்கு ரூ.164.40 இலட்சம் மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், மற்றும்  தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர்கள் வழங்கினர்.

பின்னர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம், கொரோனா தொற்றினால் பெற்றோரில் ஒருவரை மட்டும் இழந்த விருதுநகர், சாத்தூர், சிவகாசி, வத்திராயிருப்பு மற்றும் திருச்சுழி ஒன்றியங்களைச் சேர்ந்த 18 குழந்தைகளுக்கு தலா ரூ.3 இலட்சம் வீதம் ரூ.54 இலட்சத்திற்கான நிவாரணத் தொகையும் வழங்கப்பட்டது.

பின்னர், அமைச்சர்கள் தெரிவித்ததாவது:  தமிழ்நாடு முதலமைச்சர், வழியில் செயல்படும் தமிழக அரசு, மக்கள் நலன் காக்கும் அரசாக செயல்பட்டு வருகிறது. கொரோனா என்ற கொடிய நோயின் பிடியில் இருந்து, தமிழக மக்களை காப்பாற்றிய  தமிழ்நாடு முதலமைச்சர், ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் தமிழக மக்களின் நலனுக்காக ஓய்வில்லாமல் உழைத்து வருகிறார்கள். அனைத்து தரப்பட்ட மக்களின் தேவைகளை அறிந்து அவர்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான திட்டங்களை தீட்டி, செயல்படுத்தி வருகிறது.

அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில், திருச்சுழி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மூலம் 810 பயனாளிகளுக்கு ரூ.8,10,000/- மதிப்பிலான முதியோர் மற்றும் இதர நிதி உதவித் தொகைகளும், 107 பயனாளிகளுக்கு ரூ.21,40,000/- மதிப்பிலான இலவச வீட்டுமனைப்பட்டாக்களும், 7 பயனாளிகளுக்கு ரூ.3,50,000/- மதிப்பிலான கொரோனா நோய் தொற்றால் இறந்தவர்களுக்கான நிதியுதவிகளும்,

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 3 பயனாளிகளுக்கு ரூ.2,29,500/- மதிப்பிலான மின் மோட்டார் பொருத்திய மூன்று சக்கர வாகனங்களும், பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டத்தின் கீழ் 29 பயனாளிகளுக்கு ரூ.49,30,000/- மதிப்பில் வீடு கட்டுவதற்கான உதவிகளும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.58,80,000/- மதிப்பில் 4 தடுப்பணை கட்டுதல் பணிகள், தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் ரூ.21,00,000/- மதிப்பில் 4 சுகாதார வளாகம் கட்டுவதற்கான பணிகளும், கொரோனா தொற்றினால் பெற்றோரில் ஒருவரை மட்டும் இழந்த 18 குழந்தைகளுக்கு தலா ரூ.3 இலட்சம் வீதம் ரூ.54 இலட்சத்திற்கான நிவாரணத் தொகைகளும் என மொத்தம் 982 பயனாளிகளுக்கு ரூ.218.40 இலட்சம் மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், திருச்சுழி தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய அரசு கலை கல்லூரி துவங்குவதற்கும், வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில், புதிய தொழில் பேட்டை அமைக்க தேவையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், பல ஆண்டு கால கோரிக்கையான கிருதுமால் நிலையூர்- கம்பிக்குடி கால்வாயில் வைகையாற்றின் நீர் வர வேண்டும் என்பது தற்போது, நிறைவேற்றப்பட்டு, திருச்சுழி தொகுதியிலுள்ள கண்மாய்களில் வைகையாற்றின் நீர் நிரம்பி வருகிறது. இதுபோல், இன்னும் இந்த தொகுதி மக்களின் அனைத்து தேவைகளையும்; இந்த அரசு செய்து தரும் என , அமைச்சர் பெருமக்கள் தெரிவித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மங்கள ராமசுப்பிரமணியன், திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திலகவதி, அருப்புக்கோட்டை கோட்டாட்சியர்கல்யாணகுமார், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர்முத்துமாரி, ஊராட்சி ஒன்றியக்குழுத் துணைத்தலைவர் ராஜேந்திரன், காரியாபட்டி வட்டாட்சியர்தனக்குமார், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள்தங்கதமிழ்வாணன்,பா.பா.போஸ்,கமலிபாரதி, முக்கிய பிரமுகர் கண்ணன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News