இந்தியா பாகிஸ்தான் போரில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு மரியாதை
India Pakistan War- 1965 முதல் 1971 வரை இந்தியா - பாகிஸ்தான் போரில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு மத்திய அரசு சார்பில் ராணுவ மரியாதை;
இந்திய பாகிஸ்தான் போரில் உயிரிழந்த இளம் ராணுவ வீரருக்கு மத்திய அரசுநினைவு பரிசு வழங்கி கௌரவித்தது, தமிழ்நாடு என்.சி.சி. ஐந்தாம் பட்டாலியன் கர்னல் கௌரவித்து கேடயம் வழங்கினார்.
India Pakistan War- 1965 முதல் 1971 வரை இந்தியா பாகிஸ்தான் போரில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு மத்திய அரசு சார்பில் ராணுவ மரியாதை செய்து நினைவு பரிசு வழங்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் ஐ.என்.டி.யு.சி .நகர் பகுதியில் 1965 ஆம் ஆண்டு இந்திய பாகிஸ்தான் போரில் உயிரிழந்த இளம் ராணுவ வீரருக்கு மத்திய அரசுநினைவு பரிசு வழங்கி கௌரவித்தது, தமிழ்நாடு என்.சி.சி. ஐந்தாம் பட்டாலியன் கர்னல் கௌரவித்து கேடயம் வழங்கினார்.
நெல்லை மாவட்டம், பனையூர் பகுதியை சேர்ந்த அழகர்ராஜா, ராம்அம்மாள் தம்பதியினருக்கு மூன்று ஆண் பிள்ளைகளும், மூன்று பெண் குழந்தைகளும் பிறந்து உள்ளனர். இதில் அழகர் அர்ஜுன் என்பவர் 1940 பிறந்து இளம் வயதிலேயே இந்திய ராணுவத்திற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டு பணியாற்றி வந்துள்ளார்.
1965 முதல் 1971 வரை நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் போரில் 1965 ஆம் ஆண்டு அழகர் அர்ஜுன் வீர மரணம் அடைந்துள்ளார். இளவயதிலேயே வீர மரணம் அடைந்து திருமணம் செய்யாமல் இருந்ததால் தந்தைக்கு இவருடைய பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், குடும்பத்துடன் ராஜபாளையம் ஐஎன்டியுசி நகரில் குடி பெயர்ந்து வசித்து வருகின்றனர்.இந்திய நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவேறி நிலையில் மத்திய அரசு சார்பில் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வீர மரணம் அடைந்தவர்களுக்கு கௌரவித்து சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, ராஜபாளையம் ஐஎன்டியுசி நகரில் உள்ள அழகர் அர்ஜுனனின் அண்ணன் கிருஷ்ணராஜா என்பவரின் மகன் அழகேந்திரனிடம் திருநெல்வேலி என்.சி.சி. டி.என்.பி.என். ஐந்தாம் பட்டாலியன் சார்பில், கர்னல் பேபி ஜோசப் தலைமையில் ஒய் .பி. ராவ் மற்றும் நயித் சுபேதாரர் சதீஷ்குமார், மாரிமுத்து அதிகாரிகள் ராணுவ மரியாதை செய்தும், திருவுருவப்படத்திற்கு மலர் வளையம் வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.பின்பு ,மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்ட சான்றிதழ் கேடயத்தை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில், ராஜபாளையம் நகர மன்றத் தலைவர் பவித்ரா ஷியாம், துணை மண்டல வட்டாட்சியர் மற்றும் ஊர் பொதுமக்கள் உறவினர் என ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2