விருதுநகர் அருகே சாலை விபத்தில் சிக்கி உணவகத் தொழிலாளி மரணம்

விருதுநகர், என்ஜி.ஓ. காலனி பகுதியில் உள்ள நான்கு வழிச்சாலையை கடக்க முயன்ற போது, அடையாளம்தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தார்

Update: 2022-08-18 08:00 GMT

விருதுநகர் அருகே, சாலை விபத்தில் சிக்கி உணவக தொழிலாளி  உயிரிழந்தார்.

விருதுநகர் அருகேயுள்ள கே.உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன் (55). இவர் விருதுநகரில் உள்ள உணவகத்தில் வேலை பார்த்து வந்தார். வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். விருதுநகர், என்ஜி.ஓ. காலனி பகுதியில் உள்ள நான்கு வழிச்சாலையை கடக்க முயன்ற போது, மதுரையில் இருந்து திருநெல்வேலி நோக்கி சென்ற, அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று நாகராஜன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நாகராஜன், சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தார்.

சம்பவம் பற்றி தகவலறிந்த பாண்டியன் நகர் காவல்நிலைய போலீசார் விரைந்து சென்று, நாகராஜனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து நாகராஜனின் மனைவி ஆதிதேவி (50) கொடுத்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார், விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News