திருச்சுழியில் ரமண மகரிஷி ஜெயந்தி விழா :அன்னதானம்.

திருச்சுழியில் Ramanar Jayanthi Annadanam To Public ரமண மகரிஷி பிறந்த ஊரான திருச்சுழியில் அவரது ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.இதனையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Update: 2023-12-29 06:46 GMT

திருச்சுழியில் ,ரமண மகரிஷி ஜெயந்தி விழாவையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. 

.

Ramanar Jayanthi Annadanam To Public

ரமண மகரிஷி இவர்  திருச்சுழியில் பிறந்தார். இவரது ஆசிரமம்  திருவண்ணாமலையில் உள்ளது. அங்கு வரும் பக்தர்களுக்கு  தினந்தோறும் அன்னதானம் வழங்கும் வைபவம் தொடர்ந்து நடந்து வருகிறது. அங்கு நுாலகம் உள்ளது. ரமண மகரிஷி சம்பந்தப்பட்ட  நுால்களின் விற்பனையும் நடக்கிறது. தியான மண்டபம் உண்டு. அம்மண்டபத்தில்  இந்த ஆசிரமத்திற்கு வரும் பார்வையாளர்கள் அமர்ந்து நீண்ட நேரம் தியானித்து விட்டு செல்வது வழக்கம். வழக்கமான நாட்களை விட விடுமுறை நாட்கள் மற்றும் சனி, ஞாயிறு வார விடுப்பில் இந்த ஆசிரமத்துக்கு கூட்டம் அதிகம் வருவதுண்டு. அதுவும் கிரிவல நாட்களில்  ஏராளமான பக்தர்கள் வந்து பார்வையிட்டு செல்வர். 

விருதுநகர் மாவட்டம்,திருச்சுழியில், ரமண மக ரிஷி ஜெயந்தி விழா அவரு டைய பிறந்த இல்லத்தில் நடந்தது.

திருச்சுழியில் உள்ள சுந்தர மந்திரம் இல்லத்தில், ரமண மகரிஷி புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்ததால், ஒவ்வொரு ஆண்டும் அவர் பிறந்த வீட்டில் ஜெயந்தி விழா கொண்டா டப்பட்டு வருகிறது. அந்த வகை யில், புனர்பூசம் நட்சத்திரம்

தினத்தில்,அவரது இல்லத்தில் வேத மந்திரங் கள் முழங்க சிறப்புயாக பூஜைகள் நடந்தது.அதைத் தொடர்ந்து, ரமண மகரிஷிக்கு சிறப்பு பூஜை கள் நடந்தது. தீபாரா தனை காட்டப்பட்டது. ரமண மகரிஷி பக்தர்க ளுக்கு அருள் பாலித்தார்.

திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.பக்தர்க ளுக்கு, அன்னதானம் வழங் கப்பட்டது.

ஆண்டுதோறும் மார்கழி மாதம் வருகின்ற புனர்பூச நட்சத்திரன்று திருச்சியில் உள்ள அவர் இல்லத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம் ,அதன்படி நேற்று அவர் இல்லத்தில் மகாயாகம் அதைத் தொடர்ந்து ,ரமண மகரிஷி திருவுருவப்படத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ,ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதை அடுத்து, பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன .

இதற்கான ஏற்பாடுகளை ,ரமண மகரிஷி பக்தர்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News