காரியாபட்டி அருகே எம்.ஜி.ஆர். பிறந்த தினம்: குழந்தைகளுக்கு மோதிரம் அளிப்பு

பாமர மக்கள் முதல் பணக்காரர்கள் வரை அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் எம்ஜிஆர்

Update: 2023-01-20 09:00 GMT

காரியாபட்டி அருகே எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பெண்குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கப்பட்டது.

காரியாபட்டி அருகே எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு  பெண்குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கப்பட்டது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் எம்ஜிஆர். பாமர மக்கள் முதல் பணக்காரர்கள் வரை அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் எம்ஜிஆர். அரசியலில் நுழைந்து தனிக்கட்சி தொடங்கி முதலமைச்சரானார். சாகும் வரை முதலமைச்சராக இருந்தவர் என்ற பெருமைக்குரியவர்.

முன்னாள் முதலைச்சர் எம்ஜிஆரின் 106 -வது பிறந்தநாள் விழா மல்லாங்கிணறு அருகே முடியனுர் கிராமத்தில் நடைபெற்றது. காரியாபட்டி அதிமுக மேற்கு ஒன்றியச் செயலாளர் ராமமூர்த்திராஜ் தலைமை வகித்தார். கிழக்கு ஒன்றியச் செயலாளர் தோப்பூர் முருகன் முன்னிலை வகித்தார்.

விழாவில், முடியனூர் கிளைக்கழக செயலாளர் பிரகலநாதன் சார்பாக 2022 ஆண்டு பிறந்த 10 பெண் குழந்தைகளுக்கு முடியனூர் வார்டு செயலாளர் பிரகலாதன் 10 பெண் குழந்தைகளுக்கு தலா 2 கிராம் வீதம் மொத்தம் 20 கிராம் தங்கம் மோதிரமும் . பெண் குழந்தைகளின் வைப்புத் தொகையாக ரூபாய் 5 ஆயிரம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், மல்லாங்கிணறு நகர கழகச்செயலாளர் அழகர்சாமி, நகர அம்மா பேரவை செயலாளர் மணிராஜ், காரியாபட்டி ஒன்றிய அவைத் தலைவர் இந்திரா கிருஷ்ணன், மற்றும் வார்டு கழகச் செயலாளர்கள் கிளைக் கழக செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News